"ஈகோ என்றால் விலகி இரு "

 "ஈகோ என்றால் விலகி இரு "



நாம் அனைவரும் உறவுகளை நம்புவதாலும் உறவுகளிடம் எதிர்பார்ப்பதாலும் தான் கவலையடைகிறோம் என்று நினைத்து கொண்டு உள்ளோம்.ஆனால், உண்மையென்றால் "ஈகோ" பார்க்கும் உறவுகளுடன் நம் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக தான் மனசோர்வு ஏற்படுகிறது.அதன் விளைவு பிறர்மீது நம் கோபத்தைக் காட்டுகிறோம்.


இன்று நாம் பார்க்க கூடிய தலைப்பு "ஈகோ"


முதலில் நம் அனைவரிடமும் இருக்க கூடிய மிகப்பெரிய கேள்வி

 

ஈகோ என்றால் என்ன ?


சுயநலத்தின் மொத்த ரூபம் தான் ஈகோ.கெளரவத்திற்காக பிறர் முன் நான் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காக பணத்தை அதிகம் செலவிடுபவர்.எ.காட்டாக ஹோட்டலில் டிப்ஸ் கொடுத்த பின்னர் தான் உணவை ஆர்டர் செய்வார்கள்.

வீட்டில் ஏதேனும் பொருட்களை வாங்கி வர சொன்னால் அந்தப் பொருளையும் ஏற்கனவே வீட்டில் இருக்கும் பொருளையும் வாங்கி வருவார்கள்.இதுக்கும் ஈகோவிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்றால் ? 


அவங்க என்ன சொல்லுறது நம்ம என்ன செய்யுறது என்ற ஆணவம் கர்வம் திமிர் மமதை தான் ஈகோ.


மிக முக்கியமான ஒன்று ஈகோ பார்ப்பவர்களிடம் அவர்கள் செய்த தவறையோ அல்லது அவர்களது பலவீனத்தையோ நாம் சொன்னால் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.மேலும் எவ்வளவு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் அவர்களை பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள்.


ஈகோ பார்ப்பவர்களை எப்படி அடையாளம் காண்பது ?


பிறரிடம் பேசும் போது நாவில் தேன் கலந்து தான் பேசுவார்கள்.பார்க்கும் போது பெரியதாக ஒன்றும் தெரியாது.ஆனால் பழக பழக அவர்களின் வித்தியாசங்கள் ஒவ்வொன்றும் கேள்வி குறியாக மாற்றிவிடும்.

ஒரு காரியத்தை இழுத்து அடிப்பது மற்றும் காரியத்தை முடிக்கும் வரை தன்னை தாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.நிறைய பொய் பேசுவார்கள் பிறர் நம்புமளவு பேசுவார்கள்.


முக்கியத்துவத்தை அதிகம் விரும்புவார்கள்.உடனிருப்பவரின் வெற்றியை புகழை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.ஒருசிலர் கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள் அவர்கள் தோற்க வேண்டுமென்று அப்படியொரு வக்கீர எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.தகவல் பரிமாற்றம் சரியான முறையில் இருக்காது.


தவறு செய்தால் அதை திருத்திக் கொள்ள மாட்டார்கள்.மாறாக தவறைச் சுட்டிக் காட்டியவர்களை பழிவாங்க நினைப்பார்கள்.பொது தளத்தில் தன்னைவிட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள்.இரக்கம் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் போன்று பேசுவார்கள் சில சமயங்களில் ஏதேனும் உதவி செய்வார்கள் ஆனால் அதற்கு பின் அவர்கள் இவரை நாடியே இருக்க வேண்டுமென்று எண்ணுவார்‌கள்.

பொறாமைப்படுவார்கள் பெரியவர்களிடம் மட்டுமின்றி சிறியவர்களிடமும்.புயலுக்கு பின் அமைதியென்று திருந்தி விட்டார்கள் என்று நினைத்தால் அந்த அமைதி அடுத்த யாரை என்ன செய்ய வேண்டுமென்ற சிந்தனையாக தான் இருக்கும்.

மன்னிப்பும் கேட்க மாட்டார்கள்.மன்னிக்கவும் மாட்டார்கள்.


இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு ?


ஈகோ குணம் கொண்டவர்களை கண்டறிந்தால் விலகி இருங்கள்.நண்பர்களாக இருந்தால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியேறி விடுங்கள்.இல்லையென்றால் தேவையில்லாத மன உளைச்சல் மனச் சோர்வு தான் மிஞ்சும்.

வாழ்க்கை துணையாக இருந்தால் விலகியே வாழ வேண்டும்.ஏனென்றால் ஓரே வீட்டில் இருக்கும் போது வக்கீரம் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.

Healthy & Distance எவ்வளவு நெருக்கமாக இருந்தால் தூரம் தான் பல பிரச்சனைகளுக்கு வழி காட்டும்.


நேர்மறை எண்ணம் கொண்டவராக நீங்கள் இருந்தால் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் விளைவுகள் உங்களின் வெற்றி பாதையை முடக்கி விடும்.


நீங்கள் இந்த நிமிடம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்  நம்மைப்பற்றியோ யார் அதிகளவில் எதிர்மறை கருத்துக்களை முன்வைக்கிறார்கள் என்று‌? பதில் கிடைத்தால் அதிலிருந்து விலகியே இருங்கள்.

ஒரு வாழ்க்கை வாழ மட்டுமே.


ஏன் விலகி இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனின் இறுதி உச்சக்கட்ட கோபம் தான் "ஈகோ". அப்படியிருக்கும் போது அவர்களை மாற்றவோ மாற்ற முயற்சிக்கவோ செய்தால் நாமும் ஒருகட்டத்தில் எதிர்மறை எண்ணம் கொண்டவராக மாறிவிடுவோம்.


"மகிழ்ச்சி ஒரு தொற்றுநோய்" அதுபோல தான் ஈகோ மனிதனின் கொடூரமான நோய்.



நம்மை பாதுகாத்துக் கொள்ள தூரம் அவசியமான ஒன்று.


-


கீர்த்தனா பிருத்விராஜ்

Comments

Suresh Subbiah said…
அருமை அருமை

ஈகோ பிடித்தவர்கள் தங்களின் உறவுகளை, நட்புகளை பாதுக்காக்க மாட்டார்கள், விலகி செல்லும் போதும் வறட்டு கௌரவம் கொண்டே போனால் போகட்டும், எனக்கு என்ன நஷ்டம் என்பார்கள்.

கூடுமானவரை ஒருமுறை அவ்வாறானவர்களை அடையாளம் கண்டும், திருந்த வழி சொல்லியும் மாறவில்லை என்றால் விலகுவதே சிறந்தது என்ற உங்கள் கருத்துகள் மிக மிக அருமை.

நல்ல பாடம். வாழ்த்துகள் தங்கை.
Unknown said…
நல்ல கட்டுரை கீர்த்தி 🖤
நட்பு வட்டத்தில் ஈகோ பிடித்தவர்களால்
பல நேர மன உளைச்சலுக்கு ஆளாகி கஷ்டப்பட்ருக்கேன்.
பலரை விட்டு விலகிருக்கேன்.

இன்னும் சிலர் அப்படிதா வந்து சேருவதால் இந்த கட்டுரைலருந்து
தெளிவா ஒன்ன கத்துக்கிட்டேன். 🖤



Unknown said…
நல்ல கட்டுரை கீர்த்தி 🖤
நட்பு வட்டத்தில் ஈகோ பிடித்தவர்களால்
பல நேர மன உளைச்சலுக்கு ஆளாகி கஷ்டப்பட்ருக்கேன்.
பலரை விட்டு விலகிருக்கேன்.

இன்னும் சிலர் அப்படிதா வந்து சேருவதால் இந்த கட்டுரைலருந்து
தெளிவா ஒன்ன கத்துக்கிட்டேன். 🖤



Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,