கே.சங்கர்

 கே.சங்கர் நினைவு நாள் இன்று

மார்ச் 5
கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80க்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கே.சங்கர் அவர்கள் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் தாயார் ருக்மணி சிறுவயதிலே சங்கரின் படிப்பை நிறுத்திவிட்டார். அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் அவர்கள் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும். கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் எம். ஜி. ஆர், சிவாஜி படங்களை இயக்கினார் இவர் எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
மேலும் இவர் இயக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சங்கர் அவர்களுக்கு நடிப்பு காட்சி திருப்தி ஆகும். வரையில் அந்த நடிகர்/நடிகைகளை வெளுத்து வாங்கிவிடுவார்.
இவர் இயக்கும் படபிடிப்பு தளங்களில் இவர் கையில் அழகான ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். குறிப்பாக கதாநாயகிகள் உணர்ச்சி வசத்தால் வசனம் மறதி மற்றும் அழுகை காட்சிகளில் தவறு செய்துவிட்டால் அந்த பிரம்பு கதாநாயகிகளின் உடலை பதம் பார்த்துவிடும்
பாதகாணிக்கை திரைபடத்தில் நடிகை சாவித்திரிக்கு ஒரு காட்சியில் வசனம் உச்சரிப்பு தவறு செய்து விட்டதால் பல டெக் வாங்கிய அந்த காட்சியில் சாவித்திரியை நோக்கி சங்கர் பிரம்பு அடிவிழுந்தவுடன் அந்த வசனம் சரியாக சாவித்திரி பேசி நடித்தார்.
அதே போல் ஆண்டவன் கட்டளை திரைபடத்தில் தேவிகா அவர்களுக்கு உணர்ச்சி வசமாக நடிக்கவராததால் கே.சங்கரின் பொறுமையை சொதிக்கும் வகையில் இருந்ததால் அந்த உணர்ச்சி வசமான நடிப்பை தேவிகாவிடம் இருந்து சங்கர் கையில் இருக்கும் பிரம்பு அவர் முதுகை அடி பலமாக விழுந்தவுடன் உணர்ச்சி வசமான நடிப்பும் வந்தது
இதே போன்று கலங்கரை விளக்கம் படத்தில் பல்லவன் பல்லவி என்ற பாடலின் படபிடிப்பு போது நடிகை சரோஜாதேவி அவர்களுக்கு கடும் வயிற்று வலியால் அவதிபட்ட போதும் அதை சிறிதும் கவலைபடாத இயக்குனர் சங்கர் அவர்கள் அந்த பாடல் காட்சியில் சரோஜாதேவி சோகமாக முகபாவத்தை வரவழைக்க தனது கையில் இருக்கும் பிரம்பால் அடித்தவுடன் சரோஜாதேவி முகம் அந்த பாடலின் கதைக்கு தகுந்தார் போல் மாறி நடித்தார்.
மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.[2] இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
May be an image of one or more people, beard and text that says "× சங்கர்"

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,