வயதானாலும் கண்பார்வை தெளிவாகத் தெரிய சாப்பிட வேண்டிய உணவுகள்.

 வயதானாலும் கண்பார்வை தெளிவாகத் தெரிய சாப்பிட வேண்டிய உணவுகள். 




தற்போதைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.


இதற்கு முக்கிய காரணம் சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு கொழுப்பு உணவுகளை விரும்பி உண்ணுவது தான்.


எவ்வளவு வயது ஆனாலும் கண் பார்வை தெளிவாக இருக்க சில உணவுகளை சாப்பிடலாம், நல்ல பலன் கிடைக்கும்


கீரை வகைகள்


வார‌த்‌தி‌ல் குறை‌ந்தது இர‌ண்டு முறையாவது நா‌ம் உ‌‌ண்ணு‌ம் உணவில் கீரையைச் சேர்த்துக் கொ‌ண்டு வ‌ந்தா‌ல், முதுமையில் ஏற்படும் க‌ண் பார்வை கோளாறுகளை தடு‌க்கலா‌ம்.


அன்னாசிப் பழம்


தினமும் ஒரு அன்னாச்சி பழம் சாப்பிட்டு வாந்தால் கண்களுக்கு மிகவும் நல்லது.



மேலும் கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும்.


ஊட்டசத்து நிறைந்த உணவுகள்


பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அ‌திகமாக உ‌ள்ளது. எனவே இவ‌ற்றை உ‌ண்டு வ‌ந்தா‌ல் க‌ண் பா‌ர்வை குறைபாடு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌க் கூட பா‌ர்வை‌த் ‌திற‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம்.’


கொத்தமல்லி


சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.


கேரட்


கேரட்டை எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,