பயிர் அறிவியல் தொடர்பான சொல்லாடல்

 தமிழ் மொழியின் சிறப்பெனப் பட்டியலிட ஏராளமான விடயங்கள் இருப்பினும், இங்கு பயிர் அறிவியல் தொடர்பான சொல்லாடல் களையே பார்ப்போம்! இவை நம் தமிழ் மொழியின் சொல் வளத்திற்கான சான்று.


மலர்களின் பருவ நிலைகளுக்கும் பெயரிட்ட நமது முன்னோர்கள்... வெவ்வேறு வகையான தாவரங்களின் பாகங்களைக் கூட விதவிதமாய் பெயர் கொண்டு அழைத்தனர் என்பது மலைக்க வைக்கிறது!
பிஞ்சு வகைகளின் பெயர்கள் :
* பூவோடு கூடிய இளம்பிஞ்சு = பூம்பிஞ்சு.
* இளங்காய்பிஞ்சு = மாவடு.
* பலா = மூசு
* எள்= கவ்வை.
* தென்னை, பனை = குரும்பை, சிறுகுரும்பை ,முட்டுக் குரும்பை.
* முற்றாத தேங்காய் =இளநீர்.
* இளம் பாக்கு= நுழாய்.
* இளநெல் = கருக்காய்.
* வாழை= கச்சல்.
காய்நிலைகள் :
* பழுத்தற்கேற்ற முற்றிய காய் = பழக்காய்.
* முற்றிய பனங்காய் = கடுக்காய்.
* உரிய காலத்திற் காய்ப்பது = காலக்காய் அல்லது பருவக்காய்
* காலமல்லாக் காலத்திற் காய்ப்பது = வம்பக்காய்.
* முற்றிய காய் = கருக்காய்.
குலைவகைகள்:
* அவரை துவரைமுதலியன = கொத்து.
* கொடிமுந்திரி போன்றது = குலை.
* வாழை= தாறு.
* கேழ்வரகு ,சோளம் முதலியன= கதிர்.
* நெல், தினை முதலியன = அலகு அல்லது குரல்.
* வாழைத்தாற்றின் பகுதி = சீப்பு.
கனி வகைகள் :
* தெங்கு, பூசணி முதலியன = காய்.
* முந்திரி நெல்லி முதலியன= கனி.
* மா, வாழை முதலியன= பழம்.
பிற வகை :
* முதிர்ந்தபின் கனிவில்லாதது = காய்.
* முதிர்ந்தபின் கடினமானது = நெற்று.
செவ்வையாய்ப் பழுக்காத பழங்கள் :
* சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை.
* சொத்தைவகை : சொண்டு, சொத்தை, சொட்டை .
தோல்வகை : தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை.
விதைவகை : வித்து, விதை, மணி, முத்து, கொட்டை
காய் முதிர்ச்சி வகைகள்:
* மா, வாழை முதலியன = பழுத்தல்.
* சுரை பூசணி முதலியன = முற்றல்.
* தேங்காய், பீர்க்கு முதலியன= நெற்று.
* நெல், சோளம் முதலியவற்றின் கதிர் = முதிர்ச்சி , விளைச்சல்.
காய், கனி ஆகியவற்றின் கெடுதல் வகைகள்:
* நுனியில் சுருங்கிய காய் = சூம்பல்.
* சுருங்கிய பழம் = சிவியல்.
* புழு, பூச்சி அரித்த காய் அல்லது கனி = சொத்தை.
* சூட்டினால் பழுத்த பிஞ்சு = வெம்பல்.
* குளுகுளுத்த பழம் = அளியல்.
* குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய் = அழுகல்.
பதராய்ப்போன மிளகாய்=சொண்டு.
சொத்தைத் தேங்காய் வகைகள்:
* கோட்டான் உட்கார்ந்த தினால் கெட்ட காய் = கோட்டான்காய் அல்லது கூகைக்காய்.
* தேரையமர்ந்ததினால் கெட்ட காய் = தேரைக்காய், அல்லிக்காய்.
* ஒருவர் தமித்து இளநீர் குடித்த தென்னையிற் கெட்ட காய் = ஒல்லிக்காய், அல்லிக்காய்.
காயின் காம்பிதழ் வகை :
* தேங்காய் பனங்காய் முதலியவற்றின் காம்பிதழ் = இதக்கை.
* சோளத்தின் காம்பிதழ் = சொங்கு.
பழத்தோல் வகை :
* மிக மெல்லியது = தொலி.
* திண்ணமானது = தோல்.
* வன்மையானது = தோடு.
* மிக வன்மையானது = ஓடு.
* சுரையின் ஓடு = குடுக்கை.
* தேங்காய் நெற்றின் மேற்பகுதி = மட்டை.
* நெல் கம்பு முதலியவற்றின் மூடி = உமி.
* வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி = கொம்மை.
உள்ளீட்டு வகை :
* நீர் போலிருப்பது= சாறு.
* கட்டிச் சோறுபோலிருப்பது.(கத்தரி முருங்கை கற்றாழை முதலியவற்றின் உள்ளீடு) =சோறு.
* வாழை மா முதலியவற்றின் உள்ளீடு = சதை.
* சீத்தா, பலா= சுளை.
வித்துவகை :
* கத்தரி விதை போலச் சிறியது = விதை.
* வேப்பமுத்துப் போல் உருண்டு திரண்டது = முத்து.
* புளியங்கொட்டைபோல் வயிரங்கொண்டது = காழ்.
* மாங்கொட்டைபோற் பெரியது = கொட்டை.
வேர்வகை :
* ஆழமாக இறங்குவது= வேர்.
* திரண்டிருப்பது= கிழங்கு.
* உருண்டு மென்மையாயிருப்பது = பூண்டு
* குட்டையான கற்றையா யிருப்பது = கட்டை
வேரின் பிரிவுகள்:
* தண்டின் தொடர்ச்சியாக ஆழமாய் இறங்குவது= ஆணிவேர்.
* ஆணிவேரின் கிளை= பக்கவேர்
* கிழங்கு பூண்டு முதலியவற்றின் சன்னமான கிளைவேர்= சல்லிவேர்.
அரிதாள்வகை:
* நெல், கேழ்வரகு = இருவி.
* சோளம், கரும்பு = கட்டை.
* தென்னை, பனை = தூறு.
* வேம்பு, புளி= முருடு.
அடிவகை :
* நெல், கேழ்வரகு = தாள்.
* கீரை, வாழை= தண்டு.
* நெட்டி, மிளகாய்ச் செடி = கோல்.
* குத்துச்செடி, புதர் = தூறு.
* கம்பு, சோளம் = தட்டு / தட்டை.
* கரும்பு= கழி.
* மூங்கில் = கழை.
* புளி, வேம்பு =அடி.
கிளைப் பிரிவுகள் :
* அடிமரத்தினின்று பிரியும் மாபெருங் கிளை = கவை.
* கவையின் பிரிவு = கொம்பு அல்லது கொப்பு.
* கொம்பின் பிரிவு = கிளை.
* கிளையின் பிரிவு= சினை.
* சினையின் பிரிவு = போத்து.
* போத்தின் பிரிவு = குச்சு.
* குச்சின் பிரிவு = இணுக்கு.
காய்ந்த அடியுங் கிளையும் :
* காய்ந்த குச்சு = சுள்ளி.
* காய்ந்த சிறு கிளை = விறகு.
* காய்ந்த கழி = வெங்கழி.
* காய்ந்தகொம்பும் கவையும் அடியும் = கட்டை.
இலைநரம்பு :
* காம்பின் தொடர்ச்சியாக இலையின் நுனிவரை செல்வது = நரம்பு.
* நரம்பின் கிளை = நாம்பு.
பூ மடல் வகை:
* வாழை மடல் = பூ.
* தாழை, வாழை முதலியவற்றின் மடல் = மடல்.
* தென்னை, பனை முதலியவற்றின் மடல் = பாளை.
இவற்றை அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்தி அழியாத வகையில் பேச்சு வழக்கில் நிலைக்கச் செய்ய வேண்டியது ஒன்றே நம் கடமை!
இணையத்தில் இருந்து எடுத்தது
நன்றி கந்தசாமி ஆர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,