மகாசிவராத்திரி விழாவில் நடனமாடிய நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங்

 ஈஷா மகாசிவராத்திரி விழாவில் நடனமாடிய நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நடைபெற்று வருகிறது.
வழக்கமாக, சத்குரு முன்னிலையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நேரடியாக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விழாவில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சக நடிகைகளுடன் இணைந்து நடிகை சமந்தா நடனமாடினார். மேலும் ஆதியோகி சிலை முன்பு எடுத்த செல்பி புகைப்படத்தையும் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நன்றி: மாலை மலர்
May be an image of one or more people and people standing
6

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,