சிவன் அருளும் சிவராத்திரி / விருத்தம்

 சிவன் அருளும் சிவராத்திரி

"********

உலகையென்றும்

   வாழவைக்கும்

     ஓங்கார

         சிவனின்

ஒளி நிறை

    கண்களை

       உமாவான

            பார்வதி


வலம் வந்தே

  விளையாட்டாய்

      வளர்விழியை

             மூடிட

வளர்ந்தயிந்தச்

   சூழ்நிலையில்

        வந்த

            பேரிடரால்


நிலமெங்கும்

   இருள் சூழ்ந்து

      நேரிட்ட

          பிரளயத்தின்

நிலைகண்டு

   தேவியவள்    நினைந்திறைவனை

     இரவெல்லாம்

சலமகனை

   நான்கு காலம்

       சரணடைந்தே

          பூசிக்க

சதாசிவம்

     நல்லாசியை

       சாற்றியது

           சிவராத்திரி


எண்ணத்தில்

   அகந்தையை

    ஏற்றிட்டே

       மால் பிரம்மன்

எல்லாமும்

   நானென்னும்

     இறுமாப்பை

       ஒழித்திடவே


அண்ணாமலையில்

   ஜோதியாய்

      அடிமுடி

        காணாமல்

அனல் வீசு

   ஒளிபிழம்பாய்

        ஆனதும்

             சிவராத்திரி


உண்டான

   ஆலகாலம்

          உண்டிடவே

              கண்டத்தின்

உள் நிறுத்தி ப்

   பார்வதியும்

      ஓடுக்கியதும்

          சிவராத்திரி


கண்ணப்பன்

   விழியை தன்

     கண்ணாக

       பெற்றதும்

கண்முன்னே

      சிவன் தோன்றி

         காத்ததும்

           சிவராத்திரி


மனமொன்றி

    துதித்திட்ட

         மார்கண்டேயன்

            உயிர்தான்

மாண்டிடவே

   காலனவன்

      மறித்திட்ட

        வேளையில்


சினம் கொண்டு

     ஈசனவன்

       தேர்ந்த

         பக்தியெண்ணி

சீறியே

    காலனை

    சேர்ந்துதைத்ததும்

         சிவராத்திரிவனத்திலே

   பார்த்தனவன்

      வந்து தவம்

          செய்ததனால்

வரும்பாரதப்

    போரில் அவன்

       வாகை சூடி

          மேன்மையுற


புனல் சூடும்

    பெருமானும்

      புகழ் பெறவே

          பாசுபதம்

போற்றியே

   தந்த அந்த

      புனித நாளும்

           சிவராத்திரிதிருவானைக்காவில்

     யானைக்கு

        தேர்ந்தமுக்தி

              அளித்ததும்

திருஎறும்பியூரில்

    எறும்புக்கு

         தேர்ந்தமுக்தி

               தந்ததும்


திருக்குரங்கணில்

    முட்டத்தில்

       தேடி நின்ற

           குரங்குக்கும்

தெளிகாகம்அணிலும்

    முக்தி பெற்ற

     திருநாளும்

         சிவராத்திரி.

 கவிஞர் முருக.சம்பத்து 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,