மலிவு விலை மின்சார காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் ஆர்டர்கள்.

 மலிவு விலை மின்சார காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் ஆர்டர்கள்... 4 நாட்களில் பல கோடியை பாத்துட்டாங்க.





மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் மலிவு விலை மின்சார காருக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ். இந்நிறுவனம் மிக விரைவில் மூன்று சக்கரங்கள் கொண்ட ஆர்3 எனப்படும் மின்சார வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இந்த நடவடிக்கையை முன்னிட்டு மிக சமீபத்தில் ஸ்ட்ரோம் ஆர்3 மின்சார வாகனத்தை நிறுவனம் வெளியீடு செய்தது. தொடர்ந்து, இந்த மின் வாகனத்திற்கான முன் பதிவு பணிகளையும் நிறுவனம் தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கப்பட்ட நான்கே நாட்களில் சுமார் 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை தாங்கள் பெற்றிருப்பதாக நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டிருக்கின்றது.

ரூ. 10 ஆயிரம் முன்தொகையில் ஸ்ட்ரோம் ஆர்3 வாகனத்திற்கான முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மிகக் குறைந்த முன்தொகை காரணத்தினாலும், ஆர்3 மின்சார வாகனம் மலிவு விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக வெளியாகியிருக்கின்ற தகவலாலும் இந்த வாகனத்திற்கு அமோகமான முன்பதிவு கிடைத்து வருகின்றது.

ஸ்ட்ரோம் ஆர்3 மின்சார வாகனம் இந்திய மதிப்பில் 4.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிக மிக குறைவான விலை ஆகும். இதனால், மக்கள் தற்போது அதிகளவில் புக்கிங்கை வாரி வழங்கி வருகின்றனர்.

ஸ்ட்ரோம் நிறுவனம் முதற்கட்டமாக ஆர்3 மின்சார வாகனத்தை மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. ஆமாங்க, நீங்க நினைத்தது சரிதான், இவ்விரு நகரங்களில் இருந்து மட்டுமே ரூ. 7.5 கோடிக்கான ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன.
இரு நகரங்களில் மட்டும் ஸ்ட்ரோம் ஆர்3 மின்சார கார் களமிறக்கப்பட்டிருப்பது நாட்டின் பிற மாநில வாசிகளை சற்று சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. இருப்பினும், தங்களது மனதை தளரவிடாது இவ்வாகனம் விரைவில் நம்முடைய நகரங்களிலும் விற்பனைக்கு வரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் மூழ்க தொடங்கியிருக்கின்றனர்.

ஸ்ட்ரோம் ஆர்3 ஓர் வழக்கத்திற்கு மாறான உருவம் கொண்ட மின் வாகனம் ஆகும். இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் இரு வீல்களும், பின்பக்கத்தில் ஒற்றை வீலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, கார்களில் காணப்படுவதைப் போன்று கதவுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இரு கதவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், இந்த வாகனம் இருவர் மட்டுமே அமர்ந்து செல்கின்ற இரு இருக்கை வசதியுடன் மட்டுமே விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 4.3 இன்சிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7.0 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4ஜி இணைப்பு வசதி, வாய்ஸ் கன்ட்ரோல், கெஸ்ச்சர் கன்ட்ரோல், 20 ஜிபி ஸ்டோரேஜ் வசதி என எக்கசக்க சிறப்பு வசிகள் இந்த வாகனத்தில் இடம்பெற இருக்கின்றன

இதுதவிர, பவர் விண்டோக்கள், க்ளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரீ, 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள் என சில பிரீமியம் வசதிகளும் வாகனத்தில் இடம்பெற இருக்கின்றன. ஸ்ட்ரோம ஆர்3 வாகனத்தை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணிநேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

rudra


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,