இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்...

 

இயக்குவதற்கான செலவு குறைவு... இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கோமகி நிறுவனம் புத்தம் புதிய எம்எக்ஸ்3 (Komaki MX3) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இன்று (மார்ச் 19) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 2021ம் ஆண்டில் கோமகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் 4வது தயாரிப்பு இதுவாகும். இதற்கு முன்பாக நடப்பாண்டில் 3 ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை கோமகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்

தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கோமகி எம்எக்ஸ்3 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் விலை 95 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த மோட்டார்சைக்கிளின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 85 முதல் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

ஆனால் கோமகி எம்எக்ஸ்3 மோட்டார்சைக்கிளை ஓட்டும் முறையை பொறுத்து, அதன் ரேஞ்ச் மாறுபடலாம். எம்எக்ஸ்3 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 1-1.5 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் செலவாகாது என கோமகி நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும்.

ஆனால் கோமகி எம்எக்ஸ்3 மோட்டார்சைக்கிளை ஓட்டும் முறையை பொறுத்து, அதன் ரேஞ்ச் மாறுபடலாம். எம்எக்ஸ்3 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 1-1.5 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் செலவாகாது என கோமகி நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து பலரும் சிந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த கோமகி எம்எக்ஸ்3 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் கழற்றி மாட்டக்கூடிய லித்தியம்-அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பேட்டரியை ரீசார்ஜ் செய்வது சௌகரியமானதாக இருக்கும். கார்னெட் ரெட், டீப் ப்ளூ மற்றும் ஜெட் பிளாக் என மொத்தம் மூன்று வண்ண தேர்வுகளில் கோமகி எம்எக்ஸ்3 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு வசதிகளையும் இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

இதில், ரீஜெனரேட்டிவ் ட்யூயல்-டிஸ்க் பிரேக்கிங், பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் அஸிஸ்ட், இன்பில்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. முன் மற்றும் பின் என இரண்டு பகுதிகளிலும் அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோமகி நிறுவனம் தற்போது எம்எக்ஸ்3 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், நடப்பாண்டில் இதற்கு முன்னதாக டிஎன்95, எஸ்இ மற்றும் எம்5 ஆகிய 3 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை பெற தொடங்கியுள்ளன. எனவே முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர தொடங்கியுள்ளன.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,