அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு – புதிய அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தி வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் ஊரடங்கு முறை அமலில் உள்ளது. இதனால் அரசுக்கு வரி வசூல் பாதிக்கப்பட்டதால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4% அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய அரசின் அகவிலைப்படி நிறுத்தம் 2021 ஜூன் மாதம் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி 18ம் தேதி அன்று தேசிய ஊழியர்கள் சபை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது 2021 ஜூன் 30க்கு பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அகவிலைப்படி உயர்வு:

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கிடப்பட்டு வரும் ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,