லாபம்.

 விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது எனும் கேள்வியை லாபம் எழுப்பும் என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.


விஜய்சேதுபதி புரொடக்சனும், 7சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் லாபம். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக விவசாய கட்டடம் ஒன்று தேவைப்பட்டது. இதற்காக படக்குழுவினர் உண்மையாகவே ஒரு கட்டத்தை கட்டினர்.
அந்த கட்டடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த ஊர் விவசாயிகளிடமே கட்டடத்தை ஒப்படைத்துவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக அமைந்துள்ளதில் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்
இப்படம் குறித்து பேசிய இயக்குனர் ஜனநாதன், " என் படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாக கேட்கிறார்கள். இந்தப்படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ் காரன் கண்களை உறுத்தியது. நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத் தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான்.
விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம்நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது? தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால்? என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன். இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும்.
இப்படத்தில் நாயகன் விஜய்சேதுபதி. நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்" என்றார்
நன்றி: பிலிம் பீட் தமிழ்
May be an image of 2 people, beard and people standing
13

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,