யோக கணபதி த்யானம்

 யோக கணபதி த்யானம்
🌿🌹 யோகாரூடோ யோக பட்டாபிராமோ பாலார்க்காப: ச இந்த்ர நீலாம் சுகாட்ய: பாசே க்ஷவக்ஷான் யோக தண்டம் ததாநோ பாயாந் நித்யம் யோக விக்நேச் வரோ நமஹ எல்லா காலங்களும் நல்லதாகவே அமைய வேண்டும். வெற்றி மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் , ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் யோக கணபதி தியானத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வரலாம். காரியம் தொடங்கிய உடன் வெற்றியாவதும், சில காலங்களுக்கு இழுத்துக் கொண்டு நிற்பதும் அவரது ராசியின் பலன் .. எந்தத் தொழிலாக இருப்பினும் அதைத் தொடங்கிய எஜமானருடைய ராசி நிலை நன்றாக இருக்க வேண்டும். ராசி, யோகம், காலம், நேரம், அதிர்ஷ்டம் என்று பலவாறு கு றிப்பிடுகின்றனர். ராசிகணேஷ் என்னும் ராசிகணபதி வழிபாடு.நம்முடைய எண்ணங்களை எளிதில் ஈடேற்ற வேண்டும் என்பதால்தான் கணபதியின் கையில் உலக வடிவமான பூரண மோதகத்தைக் கொடுத் தார்கள். ஒருமுறை கணபதியிடம் சென்ற பன்னிரு ராசிகளும் தயங்கி நின்றன. தனது ஆவரண பீட எல்லைக்கு அவர்களை அழைத்த கணபதி, 'உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார். மனித ஜீவன்களின் தசை மற்றும் புத்தி காலங்கள் வரும்போது நவகிரகங்களின் அசைவால் யோகம் மற்றும் அவயோக பலன்களை எங்களிடம் ஏற்றி விடுகிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் அல்லலுக்கு உள்ளாகிறோம். கணநாதா! இனிமேல் மனிதர்களின் ஜீவன கால பலபலன்களை இனம் கண்டு பலன் கூற எங்களைப் பயன்படுத்தவும், ஜோதிட பலன்களைக் கண்டு பிடிக்க எங்களைப் பயன்படுத்தி உரசல் செய்யவும் வேண்டாம். வேறு வழிகளைப் பயன்படுத்திட படைப்புக் கடவுளான தங்கள் மாமன் நான்முகனிடம் கூறிவிடுங்கள் சுவாமி!’’ என்றனர். மேலும் ‘‘மகாபாரதத்தையே தங்களது தந்தத்தால் எழுதியவர் நீங்கள். வேறு ஒரு மார்க்கத்தைக் கூறுங்கள்’’ என வருந்திக் கேட்டனர். ஒரு புன்சிரிப்பை உதிர்த்த கணபதி ‘‘பன்னிரு சிறு குழந்தைகளே! என்ன இது சிறுபிள்ளைத் தனமான பேச்சு? ராசி என்ற பெயர்களை வைத்துள்ள நீங்கள் இல்லாவிட்டால் மக்களுக்கு ஜாதகம் ஏது, பலன்கள் ஏது, எதிர்காலக் கணக்குதான் ஏது? நீங்கள்தான் பன்னிரு கட்டங் களில் உள்ள கிரஹசாரபலன்களை அறிவிக்கும் தீர்க்கதரிசிகள். மனித ஜீவன்களின் சுப, அவயோகங்களை அடையாளம் கண்டு அவர்களை வாழவைக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை,’’ என்று ஆறுதல் அளித்தார் கணபதி. பிறகு அவர்களிடம், ‘‘சரி, ஒரு கண நேரம் 12 பேரும் என் மேல் ஐக்கியமாகி, புது சக்தி பெற்றுச் செல்லுங்கள்,’’ என்றார். உடனேயே அவை கணபதியின் அங்கங்களில் ஏறி அமர்ந்து கொண்டன. இவ்வாறு அவர்கள் ஒன்றாய் அமர்ந்திட்ட உருவம் யோக கணபதியாக ஆயிற்று.சில கண நேரங்கள் கழித்து அவரது சக்தி வட்டத்தை விட்டு வெளிவந்த ராசிகள் 12 பேரும் அவரவர் ஸ்தானங்களுக்குச் சென்றபோது ஒரு மனிதனுக்கு வாழ்வில் அவரவர் முன் ஜன்ம புண்ணிய கணக்குப்படி யோகங்கள் பெற வழிகாட்ட ஆரம்பித்தன. பன்னிரு ராசியினரும் தம் வாழ்வில் யோகங்களை அடைந்து வீடு, வியாபாரம், தொழிலில் மிகப்பெரிய சாதனை பெற்று வாழ்ந்திட ஒன்பது மலர்கள், முஷ்டி மோதகம், வடை, மஞ்சள் சாதம் வைத்து சுக்ல சதுர்த்தி, சனி, செவ்வாய்க்கிழமைகளில் வழிபடல் வேண்டும். படித்ததை பகிர்ந்தேன் நன்றி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,