பிரியங்களிற்கான அதீதங்கள் / கவிதை
பிரியங்களிற்கான அதீதங்கள்
-கவிதை
பிரியங்களிற்கான அதீதங்கள்
ஆர்ப்பாட்டமில்லாத அன்பியலை அழகியலோடு பிரசவிக்கும்... பொற்குவியலென பொதிந்த நேசங்களின் நிகழ்துகைகள் கனதிகளுடன் காதலை புதைத்துச்செல்லும்... அடடே அபாரமென ஆழமாய் அணைக்கையில் ஈரத்துடன் இன்பியலை இயல்பாய் துளிரச்செய்யும்... இதுவன்றோ வாய்த்ததென மனதோரம் துள்ளும் ஞாபகக்குளத்து மீன்களெல்லாம் நகைத்தபடி நகரும்.... வாழ்வியலில் இதுவென்று வளர்பிறை அதிகாரமோவென வியப்போடு விரியும் விழிகளுக்கெல்லாம் விடுகதையாய் ஒரு சுவாசம் டினோஜா நவரட்ணராஜா
Comments