உன் நாடெது ?/டினோஜா நவரட்ணராஜா
உன் நாடெது ?
இலங்கை
ஓ உனக்கு தமிழ் தெரியுமா? நான் தமிழன் அடையாளம் உள்ளதா ? ஆளடையாள அட்டையில் பார்க்கலாம் பேசுவது? வீட்டில் தமிழ் வெளியில் சிங்களம் வேலையில் ஆங்கிலம் சொந்த மொழி? தாய்மொழி மௌனம் உரிமைகள் உண்டா? ஏன் இல்லை உரிமைகளை நினைத்து வருந்த தாராளமாய் உரிமை உண்டு... வருந்துகிறீர்களா? ஆமாம் அப்படியெனில் அழிவை நினைவுகூர்வீர்களா ? இதுவரை அதொன்று தான் செய்தோம் .. ஏன் இனி??? நாம் எதற்காக வருந்தவேண்டும் எதை பிரார்த்திக்க வேண்டும் எதை பேசவேண்டும் எதை நினைவு கூர வேண்டும் என அவர்கள் முடிவு செய்கின்றனரே... எவர்கள்? .......................... சொந்த நாட்டில் அடிமைப்பிறவிகளென இன்னும் நாம் ...... டினோஜா நவரட்ணராஜா
Comments