_உலக_வன_உயிரின_தினம்.

 இன்று_உலக_வன_உயிரின_தினம்.










நாம் வாழும் உலகம் பலதரப்பட்ட உயிரினங்களுக்கும் உரிமை உடையது. மனிதரால் உணவிட்டு வளர்க்கப்படாத அனைத்து உயிர்களும் வன உயிரினங்கள் எனலாம். பரந்து விரிந்து செழித்துக் கிடக்கும் இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல. இன்று மனித இனத்தால் வாழிட அழிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடுதல், காட்டை உண்டு பெருக்கும் நகரங்கள் என்று பல காரணிகளால் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அல்ல வேகமாகவே அழிவை சந்தித்து வருகின்றன. உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் ஆண்டுதோறும் மார்ச் 3ஆம் தேதி உலக வன உயிரினங்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பிற உயிரினங்களையும் நேசிப்போம் என்பதைவிட அவற்றின் வாழ்விற்கு தொந்தரவு செய்யாமல் இருப்போம், அவற்றின் வாழ்வை அவை பார்த்துக் கொள்ளும், மனித இனத்தைப் போல் அவற்றிற்கும் இந்த பூமியில் வாழ முழு உரிமை உண்டு

Manjula sent Today at 17:41

ரசித்து இருங்கள் தினமொரு புதியதை தந்துபோகிறது இயற்கை பேரண்டத்தில் நானும் கூட கடவுளின் சிறுதுகளாய் ரசித்தும் ரசிக்கப்பட்டும்! சூரியனும் தேய்ந்து வளரும்! நிகழ்த்தமுடியாதது எதுவுமில்லை இயற்கையில்! இயற்கையும் இறைவியே! புதிய உலகம் மலர்வது கண்டு புதிய மாற்றங்கள் நிகழுது இன்று ... பழைய உலகம் நல்லதாம் அன்று புதிய மனிதன் மாற்றினான் என்று இயற்கை வருந்தி நோகுது நின்று...! மனிதர் மட்டுமா உயிர்கள் இங்கு ஊர்வன நடப்பன பறப்பன எல்லாமுயிரே... செடிகொடி மரங்கள் அனைத்திற்கும் என்றும் பூமியில் வளரும் உரிமை உண்டு உணர்வில்லா மனிதர்கள் அழித்து மகிழலாம்! காட்டை அழித்து கழனி ஆக்கினர் காட்டு உயிர்களைக் கொன்று அழித்தனர்... வீதிகள் அமைத்து கோட்டைகள் எழுப்பினர்...! மலைகளைக் கூட உடைத்து தகர்த்தனர் விண்கலம் அனுப்பி விண்வெளி ஆண்டனர்! விந்தைகள் நிறைந்த உலகினை மாற்றி சிந்தைகள் கொள்ளா போட்டிகள் போட்டு அதிகாரம் செலுத்தி ஆணவம் கொண்டனர்... அறிவுக்கு எட்டாத ஆளும் சக்தியை அற்பமாய் எண்ணி சிற்பமாய் கருதினர்...! அதிசய உலகம் அழிவது கண்டு இயற்கை தன்னை புதுப்பிக்க எண்ணி மனித சிந்தையை மாற்றிடும் முயற்சியில் புதிய வைரஸை பூமியில் பரப்பி தனது சுழற்சியை சரிப்படுத்திக் கொள்கிறதோ?! கவிதாயினி மஞ்சுளாயுகேஷ்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,