S M சுப்பையா நாயுடு.

S M சுப்பையா நாயுடு. அவர்களின் பிறந்தநாள் இன்று



 தென்னிந்திய திரை இசை உலகில் "சந்கீதையா" என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். தனது பாணியை கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் இசையமைத்தவர். இது அவரது நூறாவது நினவு ஆண்டு. இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த MUSIC CONDUCTORம் கூட. இவரது மெட்டுக்கள் அனைத்தும் உடனடி HITS ஆக விளங்கின. J P சந்திரபாபுவை குங்குமப்பூவே பாடலின் மூலம் ஒரு சிறந்த பாடகராக உருவாக்கினார். இவரது இசையில் எஸ் ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா பாடல் பெரும் புகழ் பெற்ற பாடல். இன்றும் ஜானகி அவர்கள் இந்தப் பாடலைத்தான் தனது தலைசிறந்த பாடலாக குறிப்பிடுகிறார்.

முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ராஜகுமாரி என்ற படத்தில் M N நம்பியாருக்காக திருச்சி லோகநாதன் பாடிய காசினி மேல் நாங்கள் என்ற பாடல்.
இவரது இசையில்தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய முதல் பாடலான கலங்காதிரு மனமே என்ற பாடல் 1949ல் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் K V ஜானகி பாடியது..M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி, G K வெங்கடேஷ் போன்றோர் இவரிடம் உதவியாளர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது
இவரது சில பிரபல பாடல்கள்:
திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - மலைக்கள்ளன்,
தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்,
சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை,
நீ எங்கே என் நினைவுகள் அங்கே - மன்னிப்பு,
மாலை மயங்குகிற நேரம், பச்சை மலை அருவியோரம் - மரகதம்,
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை - அன்னையின் ஆணை,
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே - தாயின் மடியில்,
கண்ணில் வந்து மின்னல் போல் - நாடோடி மன்னன், ஆகிய சில


.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,