18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் தடுப்பூசி
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மே 1 முதல் தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவருக்கும் மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 3வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், தடுப்பூசி செலுத்துவதற்கான வயதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கொரோனா சூழல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.அதைத்தொடர்ந்து மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 50 விழுக்காடு மருந்தை மாநில அரசுகளுக்கு வழங்கவும்.
வெளிசந்தைகளில் கொரோனா தடுப்பூசியை விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், மாநில அரசுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Comments