திங்கள் முக அன்னை உமையவள்(தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மலர் 2021)

 அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை  நல்வாழ்த்துக்கள். தமிழ் மொழிக்கு என்றென்றும்  தனிச்சுவை உண்டு.


 காரணம் தமிழ்ச் சொற்களின் வளம் அப்படிப்பட்டவை.


 நம் வாழ்வில் கடந்த காலம், நிகழ்காலம் எதிர்காலம்   இவைகள் அனைத்திலும் ஒன்றிப்போன சொற்கள் 


 வாரத்தின் நாட்கள் ஏழு


 திங்கள்,செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு.


 ஆண்டின் மாதங்கள்  பனிரெண்டு


சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி,  புரட்டாசி, ஐப்பசி கார்த்திகை,மார்கழி தை,மாசி, பங்குனி,


 வாரத்தில் ஏழு நாட்களும், பனிரெண்டு மாதங்களையும் சொற்களாய் வைத்து ஆதிபராசக்தி அன்னை காஞ்சி காமாட்சியை மனதில் நினைத்து ஒரு பக்திப் பாடல் எழுதினால் நன்றாக இருக்குமல்லவா.


ஆம், ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்கு, இப்பாடலை கதிரவன்

 என்பவர் எழுத ஜீவா என்பவர் இசையமைத்து, ரமேஷ் என்பவர் பாடி எங்களது தயாரிப்பில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.இந்த ஆடியோ பாடலுக்கு,  பக்தி மனத்துடன் வீடியோ ஆக்கம் " பீப்பிள்ஸ் டுடே "மதிப்பிற்குரிய திரு உமாகாந்தன் அவர்கள் வடிவம் கொடுத்துள்ளார்.  பாடலைக் கேட்டும் பார்த்தும் பக்தி மனத்துடன்,  இத் தமிழ் புத்தாண்டில்  இன்புறுங்கள்.Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி