ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் - தமிழக அரசு

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு


மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.


ஊடகம் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்


பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் செயல்பட அனுமதிக்கப்படும்


மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் ,சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்


 ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்

  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்!

மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு. தேதி பின்னர் அறிவிக்கப்படும். செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.


 தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்


தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்


சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாடுகளுக்கும் தடை


அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை


கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்


கல்லூரி &  பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங…தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்


விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும்


இரவு நேர ஊரடங்கின் போது தனியார் / பொது போக்குவரத்து & ஆட்டோ &  டாக்ஸி அனுமதி இல்லை


 மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்


அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி


தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி


பெட்ரோல் & டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி*


இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது


  ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்


திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி


நீலகிரி ,  கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் &  வெளியூர் பயணிகள் செல்ல தடை


பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை


முழு ஊரடங்கு ,  ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி


தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (செவ்வாய்) காலை முதல் அமுலாகின்றன

 இரவு நேர ஊரடங்கு.. பேருந்து சேவை ரத்து.. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பின் முழு விவரம்..!

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


கொரோனா 2வது அலை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.


இரவு நேர ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி * இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை அமல்படுத்தப்படும்.


*  இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


* தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.


* மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.


இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது


* அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம்/ ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.


* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.


* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.


* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.


*  இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.  


* கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி


* மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு


பொது


*  நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.


*  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


*  பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.


*  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


*  நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.


*  கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.


*  கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்... மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இல்லை... சத்யபிரதா சாகு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அன்றைய தினம் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இதில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் இரவு 9 மணிக்கு மேல் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதேபோல மாநிலத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா எனக் கேள்வி நிலவியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தாது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.


முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், புதுவே, கேரளா உட்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,