புனித வெள்ளி

 இன்று குட் பிரை டே




✝எனப்படும் புனித வெள்ளி 🛐- 02.04.2021
🛐இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. மரணம் என்பது முடிவல்ல; அதிலிருந்தே உலகிற்கான விடுதலை தொடங்குகிறது. மரணத்தின் அர்த்தத்தை மாற்றி எழுதியது இயேசு கிறிஸ்துவின் மரணம்.
💘தங்களது பாவங்கள், குற்றங்கள், குறைகள் ஆகியவற்றை மன்னிக்கும்படி கடவுளிடம் கெஞ்சும் மனிதர்கள் ஆடு அல்லது மாடு ஒன்றை பலி செலுத்துவதை பாரம்பரியமாகச் செய்து வந்தனர். உலகின் எல்லா நாகரிகங்களிலும் இந்த பரிகாரப் பலியைக் காணமுடியும். இவ்வாறு ஒருவர் தவறுக்கு மற்றொரு உயிரை பலியாகத் தரும்போது அது ஆடு எனில் அதை ’ பலியாடு’ என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருப்பதை அவதானிக்க முடியும்.இயேசுவை ’தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்க, மனிதர்களின் பாவங்களுக்கு பலியாக தனது இன்னுயிரை அவர் ஈந்ததே காரணம். இந்த உயிர் ஈகையை விவிலியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் அதேநேரம், இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் நோக்கும்போது இன்னும் பல புனித உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும்©👀
💔அந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணி. அவரை சிலுவையில் அறைந்த பிறகு சிலுவையோடு கல்வாரி மலையில் தூக்கி வைத்தார்கள். ஒரு புறம் சதுசேயர்கள், பரிசேயர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மறுபுறம் அவரைச் சுற்றி அரசு அலுவலர்கள், சேவகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தூரத்தில் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு எல்லாம் தம்மை கைவிட்டதாகத் தோன்றியது. அப்போது தான் தன் தந்தையை நோக்கி தந்தையே இவர்களை மன்னியும் (லூக்கா 23:24) என்று பேசினார். தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு கள்வர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது. அப்போது தான் மனம்மாறிய கள்வனுக்கு நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் (லூக்கா 23:43) என ஆறுதலாகக் கூறப்பட்டது. மூன்றாவதாகத் தம் சிலுவை அடியில் பார்த்த போது தம் அன்பு அம்மா நின்று கொண்டிருப்பதையும் தம் அன்புச் சீடர் நின்று கொண்டிருப்பதையும் கண்டார்.
❤அப்போது தான் அம்மாவை நோக்கி அம்மா இவரே உம் மகன் என்றும், சீடரை நோக்கி இவரே உன் தாய் என்றும் (யோவா 19:26) மொழிந்தார். தாம் அழைத்த சீடர்கள், தம்மால் குணம் பெற்ற மக்கள் தம்மைப் பின்தொடர்ந்தவர்கள் என்று எல்லாத் தரப்பினரும் தம்மைக் கைவிட்டதாய் உணர்ந்தார் இயேசு. ஒரு வேளை தந்தையும் தம்மைக் கைவிட்டாரோ என்று எண்ணிய போது தான் என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று உரக்கக் கத்தினார். எல்லாவற்றையும் முடித்ததாய் எண்ணிய போது, அவருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் தாகமாய் இருக்கிறது (யோவா 19:28) என்று சொன்னார். அவர்கள் கொடுத்த புளித்த திராட்சை இரசத்தைக் குடித்து விட்டு எல்லாம் நிறைவேறிற்று (யோவா 19:30) என்று கூறினார். இந்த எல்லாம் நிறைவேறிற்று என்று அவர் கூறியதில் தான் பல இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் நிறைவேறின.
💞அதாவது அவருடைய சரீர வாழ்வு நிறைவேறியது. முன் குறித்து வைக்கப்பட்ட அடையாளங்கள், இறைவாக்குகள் நிறைவேறின. தந்தையாகிய கடவுள் அனுப்பிய, மனித இரட்சிப்பின் பணி முடிந்தது. உயிர்ப்பு என்ற தொடக்கம் பிறக்க அவருடைய பாடுகள் நிறைவேறின. எல்லாவற்றையும் நிறைவேற்றிய பிறகு தான் தந்தையை நோக்கி இறுதியாக அவர் அழைத்தார். அப்போது தான் தந்தையே உமது கைகளில் என் உயிரை ஒப்படைக்கிறேன்(லூக்:23:46) என்று ஜெபித்து உயிர் துறந்தார். இயேசுவின் வாழ்வு இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே ஒரு ஜெபமாக இருந்தது. இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே ஒரு பாலமாக அமைந்தது. அவருடைய ஜெபம் மனிதனை இறை தந்தையிடம் அழைத்துச் செல்வதாக இருந்தது. மனிதனையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக அமைந்தது.
✝சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்🛐©👀
1. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.
2. “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43)
3.“இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).
4.“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).
ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம்.
5. “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)
வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார்.
6. “முடிந்தது” (யோவான் 19:30)
கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
(i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.
(ii) பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங் களும் நிறைவேறி முடிந்தது.
(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.
(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.
(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.
(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.
7. “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)
இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அதாவது, அவர்கள் அவரைக் கொலை செய்ததினால் அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவாதிபதி. ஜீவனைக் கொடுக்கிறவர். அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக் கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக் கொடுத்தார்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,