பன்னாட்டுப் பண்பாட்டு நாளாமின்று
பன்னாட்டுப் பண்பாட்டு நாளாமின்று

“பண்பாடு என்னும் சொல்லே 1937க்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு வந்தது. டி.கே.சி-தான் பண்பாடு என்ற சொல்லை உருவாக்கினார்” என்போருமுண்டு.
ஒரு நாட்டில் மக்களால் பேசப்படும் மொழி வளமை, விருந்தோம்பல் பாங்கு, கலைவளம் ஆகியவற்றை வைத்தே அந்த நாட்டின் பண்பாட்டை அளவிட இயலும். ஏனெனில் மொழி, விருந்தோம்பல், கலை மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாக இருந்து வந்துள்ளது என்று வரலாற்றுப்பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றது. ஒரு இனத்தையும், அவ்வினத்தின் அடையாளங்களையும் அழித்து விட வேண்டுமென்றால், அந்த இனத்தின் மீது ரத்தத்தை உறைய வைக்கும் அணுகுண்டுகளை வீசத் தேவையில்லை. அந்த இனத்தின் மொழியை மட்டும் அழித்தால் போதும். அந்த இனம் தன்னைத்தானே அழித்து கொள்ளும் என்பார்கள்
இதன் காரணமாகவே உலக பண்பாட்டு வளர்ச்சிக்கான துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் பண்பாட்டிலும் அக்கறைகாட்டி வருகின்றது.
உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் பண்பாடும் மூலம் என்பதை உணர்ந்து மானிடவர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேரான பண்பாடு – கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உலக பண்பாட்டுத்தினம் சர்வதேச ரீதியாக ஒவ்வோர் ஆண்டும் கடை பிடித்து அது குறித்து அலச வேண்டுமென சொல்லி இருக்கிறது.
Comments