உலகக் குரல் தினமின்று ..

 உலகக் குரல் தினமின்று .. குரல்..! மனித பிறப்பின் தனி அடையாளம்...




பிறக்கும்போது வெறும் அழுகையாக மட்டுமே வெளிப்படும் குழந்தையின் குரல், படிப்படியாக சிரிப்பொலி, பிறகு அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் துவங்கி ஓரிரு வார்த்தைகள், சொல்வதை திரும்பச் சொல்லி, கேள்விக்கு பதில் சொல்லி என குழந்தைகள் வளர்வதைப் போலவே அவர்களது மொழியும், குரலும் வளர்ந்து பிறகு சிந்தித்துப் பேசும் நிலையை எட்டுகிறது.
அந்த வகையில் குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் (Brazilian Society of Laryngology ) 1999ல் முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.
"மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு" என்கிறது பைபிள். ஆசிரியர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள் போன்றவர்களுக்கு குரலின் அருமை தெரியும். ஆனால் பேசும்நிலையை எட்டியபிறகு வாழ்வின் இறுதிமூச்சு வரை பேசிக் கொண்டேயிருக்கும் சாதாரண மனிதன், அந்தப் பேச்சுக்கு அடிப்படையான குரலைப் பாதுகாக்க எந்தவொரு முயற்சியும் எடுப்பதே இல்லை என்று வருத்தத்துடன் கூறும் மருத்துவர்கள், சூடான பானம், குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், விடாத சிகரெட் என எத்தனையோ காரணிகள், குரலை பாதிக்கும் என்பதை நமக்கு நினைவுப்படுத்தவே அதற்கான விழிப்புணர்வு தினமாக, இன்றைய தினத்தை 'சர்வதேச குரல் தினம்' என அனுசரித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,