சேக்சுபியர் நினைவு நாள்
சேக்சுபியர் நினைவு நாள் இன்று ஏப்ரல் 23.
( 26 ஏப்ரல் 1564 - இறப்பு: 23 ஏப்ரல் 1616). ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.
Comments