ஏ. எம் ராஜா

ஏ. எம் ராஜா நினைவஞ்சலி:

😢
இன்று ஏராளமான பாடல்கள் இருந்தபோதிலும், பழைய பாடல்களின் இனிமை அதில் வருமா? பழைய பாடல்களில் குறிப்பாக ஏ. எம். ராஜாவின் பாடல்களில் சொக்கிப் போகாதவர்கள் யார்..?
கற்கண்டும் தேன் சுவையும் கலந்தது போன்றவை ராஜாவின் பாடல்கள். அதிலும் குறிப்பாக நடிகர் ஜெமினி கணேசனுக்காக ராஜா பாடிய பாடல்களுக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.”ஆடாத மனமும் ஆடுதே; ஆனந்த கீதம் பாடுதே..” என்ற ராஜாவின் தேனிசைப் பாடலுக்கும் ஜெமினி கணேசனின் அழகு முக அபிநயத்துக்கும் மயங்காதவர் யார்..?
நடிகையர் திலகம் சாவித்திரியின் ஒயிலும் ஜிக்கியம்மாவின் இசைப் பிண்ணனியும் சேர்ந்து கண்ணுக்கும் காதுக்கும் கொடுத்தது மிகப்பெரிய விருந்தல்லவா?
இப்படி இன்னும் எத்தனையோ பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘கல்யாணப்பரிசு’ என்ற திரைப்படத்தில் ஏ. எம். ராஜா பாடியதுடன் மட்டுமல்லாது,இசையமைத்தும் பாடல்களுக்குப் புது மெருகு சேர்த்தார்.
’ வாடிக்கை மறந்ததும் ஏனோ…’ என்ற பாடலின் இசையைச் சொல்வதா, அந்த தேன்குரலில் சொக்குவதா , கதா நாயகன் ஜெமினியும் கதா நாயகி சரோஜாதேவியும் சைக்கிளில் வலம் வரும் அந்தஅழகுப் பயணத்தைச் சொல்வதா, என்று ரசிகர்கள் லயித்துப் போனது இன்றைக்கும் நிலைத்து நிற்கும் நிஜம்!
‘ஆடிப்பெருக்கு ‘என்ற திரைப்படத்தில் “தனிமையிலே இனிமை காண முடியுமா” என்ற பாடலில் ஏ.எம்.ராஜாவின் தித்திக்கும் குரலும் ஜெமினி கணேசன், சரோஜா தேவியின் ரம்மியமான நடிப்பையும் எவராலும் மறக்க முடியாது.
எத்தனையோ பாடல்களை சொல்லலாம் என்றாலும் தேனிலவு என்ற திரைப் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் தேன் போன்றவை. திரைப்படத்துக்கு இசையும் அமைத்து “ஓஹோ எந்தன் பேபி” என்ற அருமையான பாடலுடன் “பாட்டுப் பாட வா” என்ற வினாப்பாடலில் நமது ஆவலை எல்லாம் தூண்டும் ஏ.எம். ராஜாவை இன்னும் பாடு இன்னும் என்று தானே பதில் சொல்லத் தூண்டும்…
“திங்கள் உறங்கிய போதும் தென்றல் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா? என்றூ கற்கண்டையும் தேனையும் குழைத்து வினாத் தொடுத்த ஏ.எம்.ராஜாவின் பாடல்களை நினைத்துக் கொண்டால் நம் நெஞ்சம் தான் உறங்கிடுமா… ரசிகர்களின் கண்கள் தான் உறங்கிடுமா?

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,