சிறந்தே நகைச்சுவை சேர்த்த விவேக முகம்




நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி :


 உலகத் தமிழர்கள் மனதில் என்றென்றும் தனியிடம்


 உண்மையை வளர்ந்திடும் மரங்களே சொல்லிடும்


 மண்ணில் இவரூன்றிய செடிகொடிகளும் அழுதிடும்


 கண்ணில் ஈரத்தை தானாய்த் தந்திடும்



 மனதில் உறுதி வேண்டும் படத்திலேயே அறிமுகம்



 மாசாகும் புகைக்கும் கருத்து சொன்ன ஒரு முகம்


 சின்னக் கலைவாண ராய் சிந்திக்கவைத்த சிரிப்பு முகம் 


 சிறந்தே நகைச்சுவை சேர்த்த  விவேக முகம்



 எதார்த்த வசனங்கள் எவரையும் ஈர்க்கும்


 எவரிடமும் அன்பாய் இருப்பதிவர் பழக்கம்


 அப்துல் கலாமுடன் அப்போது  அறிவார்ந்த பேட்டி 


அமைதியாய் உறக்கம் தாங்கும் கண்ணாடிப் பெட்டி.







--முருக,சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,