அனல்காற்று வீசும்.

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பல்வேறு நகரங்களில் பகல் நேர வெப்பநிலை உச்சத்தை தொடுகிறது.வடமேற்கு திசையில் இருந்து வீசும் தரைக்காற்று, தமிழக பகுதி நோக்கி வீசுவதால், பகல் நேரத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 5 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக இருக்கும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை ஆகிய, 20 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த மாவட்டங்களில் அனல்காற்று வீசும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள் வாக்காளர்கள், போக்குவரத்து காவலர்கள், பகல், 12:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை ஊர்வலம் செல்வது உள்ளிட்ட பணிகளை தவிர்க்க அறிவுறுத்தப் படுகின்றனர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,