மனசே... கொஞ்சம் ரிலாக்ஸ்

 மனசே... கொஞ்சம் ரிலாக்ஸ்... ப்ளீஸ்❤.......????!!!

சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா?


சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா? பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுபவரா? ரசத்தில் உப்பு குறைவாக இருந்தாலும் எரிச்சல் அடைபவரா?


இப்படி எதற்க்கெடுத்தாலும், ‘சுருக்’கென கோபப்படும் நபர் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சி எடுங்கள்.


 இல்லாவிட்டால் சிறு வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.


அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. 


அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். 


ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது.


 இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.


உடல் எடை அதிகமாக இருக்கலாம்; ரத்தக் அழுத்தம் இருக்கலாம்; மது பழக்கமும் கூட ஒருவருக்கு இருக்கக்கூடும். 


ஆனால் அவற்றில் எல்லாம் வராத மாரடைப்பு, மன அழுத்தத்தால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.


 ஆத்திரப்படுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது, அவர்கள் என்ன தான் ஆரோக்கியமாக இருந்தாலும், ‘சி-ரியாக்திவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு ரசாயனம் உருவாகிறது. 


அது தான் ஆபத்தானது. ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வர அது தான் காரணமாகிறது. 


மாரடைப்பில் இறப்போரில் 50% பேர், இந்த வகை பாதிப்பால் தான் இறக்கின்றனர்.


போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது எரிச்சல்படுவது, ரயில் முன்பதிவு செய்யும்போது ‘உச்ச்…’ கொட்டுவது, மனைவியிடம் சண்டை போடும்போது, கண் சிவப்பது, ஆபீஸில் பாஸ் ஏதாவது சொல்லிவிட்டால், தவறை திருத்திக்கொள்ளாமல் புலம்புவது போன்றவையும் மன அழுத்தத்துக்கு அறிகுறி.


 எல்லாவற்றையும் திட்டமிட்டு அமைதியாக செயல்பட்டால், இருதய பாதிப்பே வராது” என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,