விவேகமான பேச்சில்
நட்டச் செடிகளின்
வாழ்வுதனை
நீ பார்த்து
மகிழ
காலனுக்கு
மனசில்லை..
ஒவ்வொரு
செடிகளின் உள்ளே
உனது உயிர்
துடித்திருக்க
நீ மட்டும்
உயிர் விட்டு
போயிருக்கிறாய்..
விவேகமான பேச்சில்
எங்கள் மனதில்
மயங்கியவனே
மீண்டு வரா
மயக்கத்தில்
மரணித்தாயே...
உனது நகைச்சுவையில்
நிறைந்து கிடக்கும்
சிந்தனை செதுக்கல்
மூட நம்பிக்கையில்
மூழ்கிய மனங்களுக்கு
விழிப்புணர்வு தந்து
விழிக்காமலே
விண்ணுலகம் சென்றாயே..!!
பில்மோர் பாலசேனா(மலேசியா)
Comments