நெல்லி பானம்,

 

உடல் உஷ்ணம் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் நெல்லி பானம்,உடல் உஷ்ணம் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும் நெல்லி பானம், எல்லோருமே குடிக்கலாம்!
தேவை ( மூன்று டம்ளர் அளவு)
பசுந்தயிர் - 1 கப்
நெல்லிக்காய் - 6
கொத்துமல்லித்தழை - கால் கப்
புதினா இலை - கால் கப்
கறிவேப்பிலை - 10
இஞ்சி நறுக்கியது - 1 பெரிய டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகு - 3
உப்பு - தேவைக்கு
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
சீரகப்பொடி - அரை டீஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு

நெல்லிக்காய் கொட்டை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி எடுக்கவும். கொத்துமல்லித்தழை புதினா தழைகளை நறுக்கி சுத்தம் செய்து எடுக்கவும். இஞ்சியை தோல் சீவி கழுவி எடுக்கவும்.
தயிரை கடைந்து மோராக்கி விடவும். வெண்ணெய் நீக்கிவிடவும். நெல்லிக்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய் மிளகு எல்லாவற்றையும் நன்றாக மைய அரைக்க வேண்டும்.
பிறகு இதை மோருடன் கலக்கி உப்பு, சீரகப்பொடி, பெருங்காயம் சேர்த்து கலந்து விடவும். வடிகட்ட வேண்டாம். தொண்டை கமறல் இருப்பவர்கள் மட்டும் இதை டம்ளரில் ஊற்றி அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு மேலாக குடிக்கலாம்.

இதை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் ஓராயிரம் நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

அப்படி என்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்.

மோர் சிறந்த புரோபயாட்டிக் கொண்டவை. இது வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கும். மலச்சிக்கலை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். உஷ்ணத்தை தணிக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அளிக்க கூடியது கால்சியம் நிறைந்தது. இரத்த அழுத்தத்தை குறைக்கும். கொழுப்பை குறைக்கும்.

நெல்லிக்காய் வைட்டமின் சி கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை செய்ய கூடியது. செரிமானத்தை தூண்ட கூடியது. கண்களை பாதுகக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது. உடலில் தொற்றூ வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கலை தடுக்கும். உடல் எடையை சீராக்க கூடியது. கண்களுக்கு நன்மை செய்யகூடியது. இது சருமத்தையும் கூந்தலையும் கூட பாதுகாக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,