கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
சமூக அக்கறை கொண்ட மாமனிதர்! அய்யா அப்துல்கலாம் கேட்டு கொண்டத்திணங்க ஒன்றரை கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தவர்! பலர் சுவாசிக்க ஒரு கோடி மரம் நட்ட சின்ன கலைவாணரே.. இன்று உங்கள் சுவாசம் நின்றாலும் நீங்கள் நட்ட மரம் என்றென்றும் சுவாசம் தரும் நல்லவனுக்கு நாட்கள் குறைவு என்பதற்கு இயற்கை மீண்டும் தந்த ஒரு எடுத்துக்காட்டு இன்றைய உங்கள் பிரிவு... தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ அவர்கள். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக வலம் வந்தவர்
--மஞ்சுளாயுகேஷ்
Comments