தமிழ் புத்தாண்டான இந்நாளில் பெண்ணினத்தை போற்றுவோம்(தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மலர் 2021)

 தமிழ் புத்தாண்டான இந்நாளில் பெண்ணினத்தை போற்றுவோம்

 நம் இறைவன் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராய் சக்தியோடு இணைந்து அம்மையப்பனாய் இருக்கிறார். இந்நன்னாளில் ஒவ்வொரு ஆடவர் வாழ்விலும்  அவனுக்கு மனைவியாய், இல்லத்தை  நல்லதொரு பாதைக்கு  கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறாள் 


அவரை இல்லத்தரசி என்கிறோம். 


"திருமதி என்பவள் நிறைமதி தானே '" தமிழ் புத்தாண்டில்

 எளிய வார்த்தை கொண்டு பாராட்டலாமே.திருமதி வாழ்வின்                                                    நிறைமதி

         ---------====-------


 இல்லறத்தில் நல்லறம் அமைவது பெண்ணாலே


 இன்முகத்துடன் தொடரும் முகலர்ந்த சொல்லாலே


 தந்தை தாய்க்கு அடுத்தபடி  மெச்சும் 


 தரணியில்  அவள்தானே வாழ்வின் உச்சம்


                சரணம் 1


 விட்டுக்கொடுக்கும் நிலையில் வருமே நிறைவும் 


 கற்றுக்கொள்ளும் யாவும் தருமே மகிழ்வும்


 அன்றாட நிகழ்வில் பெறுவோம்  நெகிழ்வும்


 ஆளுமையில் புரியும் துணைவியின் அறிவும்


            சரணம் 2


 தடுமாறும்  காலத்தே தாங்கிப் பிடித்து


 தடம்மாறா நெறியில் நல்லதையே அளித்து


 கண்ணும் கருத்தாய் இருக்கும்வரை இணைந்து


 நம்முள் இருப்பாள் உறவில் உயர்ந்து

 

           சரணம் 3


 காலத்தின் போக்கில் கடந்திடும் பயணம்


 ஞாலத்தில் இல்லாள் புன்னகைக்கும் தருணம்


 பந்தத்தில் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவள்


 பௌர்ணமி நிலவாய் குளிர்ந்தே உறைபவள். முருக., சண்முகம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,