கிரீன் டீ, முட்டை, வாழைப்பழம்… காலையில் இந்த உணவுகள் ஏன் முக்கியம்

 

கிரீன் டீ, முட்டை, வாழைப்பழம்… காலையில் இந்த உணவுகள் ஏன் முக்கியம் தெரியுமா?

: எடை குறைப்பு என்பது தற்போது வணிகமாக மாறிவருகிறது. ஒருவரின் உடல் வகை, வாழ்க்கை முறை, வளர்சிதை மாற்றவிகிதம், உடல் செயல்பாடு மற்றும் உணவு உட்பட பல காரணிகள் உள்ளன. அதனால்தான் சத்தான மற்றும் கலோரி குறைவாக உள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இவை உங்கள் எடை குறைப்பு இலக்கை ஆரோக்கியமான வழியில் அடைய உதவும்.


எடை குறைப்பு என்பது தற்போது வணிகமாக மாறிவருகிறது. ஒருவரின் உடல் வகை, வாழ்க்கை முறை, வளர்சிதை மாற்றவிகிதம், உடல் செயல்பாடு மற்றும் உணவு உட்பட பல காரணிகள் உள்ளன. அதனால்தான் சத்தான மற்றும் கலோரி குறைவாக உள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இவை உங்கள் எடை குறைப்பு இலக்கை ஆரோக்கியமான வழியில் அடைய உதவும்.

உடலை ஃபிட்டாக வைப்பதற்கு சூப்ப்ர்ஃபுட்ஸ் உதவுகின்றன. ஏனெனில் அவற்றில் அனைத்து அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளன. மேலும் கொழுப்பை எரிக்ககூடிய எரிபொருளை கொண்டுள்ளதால் வேகமாக எரித்து கொழுப்பைக் குறைக்கின்றன.


ஒரு நாளில் காலை உணவு என்பது மிக முக்கியம். ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்பண்புகளைக் கொண்ட சூப்பர்ஃபுட்ஸ் ஒரு நாளின் நல்ல தொடக்கமாக அமைகிறது. மேலும், எடை குறைப்புக்கு இவை நல்ல உணவுகள் என்று வைட்டபயாடிக்ஸ், உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர் கூறுகிறார்.

ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாகும். ஏனெனில் இது உங்கள், உடல் நாள் முழுவதும் செயல்பட போதுமான சக்தியை அளிக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது. இதில் பீட்டா குளுக்கன் உள்ளது. இது ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும்.

வாழைப்பழம்

வாழைப்பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வாழைப்பழங்களும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை இரண்டும் இதயத்திற்கு மிக முக்கியமானவை.

முட்டை

எடை குறைக்க விரும்புவர்களுக்கு முட்டை மற்றொரு ஆரோக்கியமான உணவாகும். இது அதிக புரதச்சத்தையும் குறைந்த கலோரிகளையும் கொண்டுள்ளது. இதை காலையில் உணவாக எடுத்துக் கொள்ளும்போது நமக்கு தேவையான சக்தியை அளிப்பதால் மதிய உணவிற்கு இடையிலான சிற்றுண்டியின் தேவையை நீக்குகிறது.

பெர்ரி பழம்

பெர்ரி பழங்கள் சுவையானது மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் நிறைந்தது. நம்மிடம் புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற வகைகள் உள்ளன. இவற்றில் மற்ற பழங்களை விட சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

யோகர்ட்

இதிலுள்ள புரதச்சத்து மெலிந்தவர்களை வலிமையாக்குகிறது. இயற்கையாகவே உள்ள புரதமானது கார்போஹைட்ரேட்டை விட விரைவாக செரிக்க கூடியது. இதனை உட்கொள்வதால் கலோரிகளை சேமிக்கலாம். சர்க்கரை சேர்க்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லது. தேவைப்பட்டால் இனிப்புக்கு பழங்களை சேர்க்கலாம்.

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆண்டிஆக்சிடெண்ட் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது ஒரு இயற்கையான ஆற்றல் மூலமாகும். இதனை சர்க்கரை சேர்க்காமல்  சாப்பிடுவது நல்லது. தேவைப்பட்டால் எலுமிச்சை அல்லது தேன் சேர்க்கலாம்.

மேற்கூறிய உணவுகளில் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு உணவுகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொள்வதன் மூலம் உணவு உட்கொள்வதை சுவாரசியமாக்கலாம். மேலும், ஒரே மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கலாம், என்று ரோஹித் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,