பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 திரையுலகில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆரம்ப அனுபவமே வித்தியாசமானது... ஒரு சினிமா கம்பெனிக்கு பாட்டெழுதிக் கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தைக் கேட்க பட அதிபரிடம் சென்றார், பணம் இன்றைக்கு இல்லை..நாளைக்கு வந்து பாருங்க என்று பதில் வந்தது..ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். 'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரு' என்று சொல்லிவிட்டு பட அதிபர் கோபமாக வீட்டிற்குள் போய்விட்டார்.


உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தைக் கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை? தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன் நீ யார் என்னை நில் என்று சொல்ல? இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் திகைத்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.என்றும் பொருந்தும் வலிமையான வரிகளுக்கு சொந்தகாரன்.. தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது! என்கிற பாடல் வரிகளை சுட்டிக்காட்டி, மக்கள் கவிஞருக்குரிய தரம் இந்த வரிகளில் இருக்கிறது என்றார் பொதுவுடமை தலைவர் ஜீவா அவர்கள். மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் ..ஏப்#13.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,