சிந்தனையாளன் இறப்பதில்லை

 சிந்தனையாளன் இறப்பதில்லை

*

சிந்தனையாளர் ஆனைமுத்து -












பெரியாரின் 

கருஞ்சட்டைப் படையில்

அவரொரு யானை


இட ஒதுக்கீட்டு வரலாற்றில் மறைந்திருக்கும்

அவர் பெயரே

ஒரு ஆணை.


கால நடையில்

பகுத்தறிவுக்

கருத்துக்கள் விதைத்தார்


கால் நடையாகவே பயணித்து

வடக்கிலும் கூட

பெரியார் சிந்தனையை வளர்த்தார்.


மண்டல் கமிஷன் பரிந்துரை செயற்பட மும்முரமாய் இயங்கியவர்


மாபெரும் மாற்றத்தை

இந்திய அரசியலில்

அதன் மூலம்

மௌனமாய் முழங்கியவர்.


கருப்பும் சிவப்பும்

இணைந்த பாதை

நாளைய விடுதலைக்குத் தேவை என்றார்


அறிவு வயல்களை

ஆழ உழுது 

அதற்கான விதைகளை

ஊன்றிச் சென்றார்.


வயது ஒரு வளர்ச்சி

அது இளமையைத் தடுப்பதில்லை

என்பதற்கு அவர் சந்தேகமில்லாத சாட்சி


சிந்தனை ஒரு மலர்ச்சி

அது ஒவ்வொரு கணமும் நெஞ்சில்

பரிணமிக்கும் என்பதற்கு

அவர் சொற்களே நம் கண்கண்ட ஆட்சி.


உடலை ஓம்புமின் - அதை

ஒழுக்கத்தால் புரிந்தார்

உயிரை நீத்த பின்

உடலை மருத்துவக் கல்விக்கே கொடுத்தார்.


வரலாறு எழுதப்பட்டது

அவர் கைகளால்


இனி அது தொடர்ந்து எழுதப்படும்

அவர் கருத்துக்களால்.


சிந்தனையாளர் ஆனைமுத்து வாழ்வார்

பெரியார் புகழோடு சேர்ந்து


ஆரக்கால்களாய் சுழலும் அவர் முயற்சிகள்  பெரியார் எனும் சக்கரத்தோடு

பாய்ந்து.

*


பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி