சாதி|சமூக கவிதை
சாதி|சமூக கவிதை
அரசியல்வாதிகளின்
வாக்கு வங்கி.
சகுனிகளுக்கு
பகடைக்காய்.
மூடர்கூடத்தின்
முகவரி.
முற்போக்காளர்களுக்கு
கழிப்பறை.
பெயருக்கு
பக்கமென்றால்
வாங்கிய பட்டத்திற்கு
இது வெட்கம்.
கொடுப்பதற்கு
பிறப்பை கேட்கும்.
கல்விக்கு
கேள்வியை கொடுக்கும்.
ஆத்திரத்திற்கு
அருவாள் தூக்கும்
ஆபத்திற்கு உதவாது.
காதலுக்கு
மூக்கை நுழைக்கும்
ஆசைக்கு வராது.
வறுமையை
ஏளனமாக பார்க்கும்
பணத்திற்கு இது தெரியாது.
ஆணவத்திற்கு
வால் பிடித்து வரும்.
அறிவுக்கு எட்டாது.
பெருமைக்கு
உறவாடும்.
நட்பிற்கு ஒட்டாது.
அறம் கெட்டது.
முரண்பட்டது.
மதம் தொட்டது.
மனிதம் விட்டது.
இதற்கு பெயர் சதியாகத்தானே
இருக்க வேண்டும்.
சதிக்கு கால் போட்டு
சாதியானது எப்படி.
சாதிக்கு கை குலுக்கினால்
சஞ்சலங்கள் தோள் கொடுக்கும்.
சமத்துவம் இல்லையென்றால்
சமாதிக்கும் சாந்தியேது.
சாதி..
சாதியின்றி சாதி
சதியின்றி சாதிக்க
சாதிக்கு எதற்கு சேதி
சேதியோடு சாதிக்க
சாதியின்றி சோதி.







இக்கவிதையை காணொளியாக என் குரல் வழியே கேட்க..
கவிதைக்கான சேனல்
"நயினாரின் உணர்வுகள்"...வரவேற்கிறேன்.
Comments