இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா

 இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா நிறுவப்பட்ட நாளின்று
💥
இந்தியாவில் ஏறத்தாழ 200க்கும் மேற்ப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் அதிகமானவை தேசியப்பூங்காவாக அறிவிக்கப் பட்டு அரசால் சுற்றுலா ஊக்குவிக்கப்படும் இடங்களாக உள்ளன. பல்வேறு பட்ட புவியியல் அமைப்புகள், மாறுபட்ட சீதோஷன நிலைகள், கணக்கிட முடியாத வகைகளில் விலங்கினங்கள் மற்றும் பறவைகள் என ஒவ்வொரு தேசியப் பூங்காவும் அதிசயங்களை அள்ளித்தந்தாலும் அதில் சில வேறெங்கும் நமக்கு கிடைக்காத காட்சிகளையும், அனுபவங்களையும் தரக் கூடியது
இதிலே நம்ம இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (Jim Corbett National Park)
இது 1936-ல் நிறுவப்பட்டது. உத்தராகண்டம் மாநிலத்தில், மேற்கு இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 ச.கி.மீ பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது.
ஆரம்பத்திலே எய்லி தேசியப் பூங்கா என்றழைக்கப்பட்டுப் பின்னர் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், இயற்கைப் பாதுகாவலரும், நூலாசிரியருமான ஜிம் கார்பெட்டின் பெயர் சூட்டப்பெற்றது.
இது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் இப்பூங்காவின் விலங்கினங்களில் முக்கியமானவை. யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. இங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும், பாலூட்டிகளில் 50 சிற்றினங்களும், பறவைகளில் 580 சிற்றினங்களும், ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் காணக்கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரை பூங்கா திறந்திருக்கும்
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்தியாவின் பெருமைகளுள் ஒன்றான வங்கப்புலியை காணலாம்.
யானை மீது அமர்ந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியது இங்குதான்
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
கடந்த 1973ம் வருஷம் இதே ஏப்ரல் ஃப்ர்ஸ்ட் அன்னிக்குத்தான் நமது இந்திய அரசு, புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டத்தை இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கிச்சாக்கும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,