ரமலான் நோன்பின் சிறப்பு..

 ரமலான் நோன்பின் சிறப்பு.....நேற்று 13.4.2021... தேதியன்று மாலை தமிழ்நாட்டில் பிறை தெரிந்தவுடன் ரம்லான் நோன்பு ஆரம்பமானது.


ரமலான் நோன்பின் சிறப்புகளை தற்போது பார்ப்போம்.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அந்தப் பசியினை அனைவரும் உணர்ந்து தன்னை அறியவேண்டும் என்பதே அருள் வளம் நிறைந்த ரமலானின் புண்ணிய நோக்கமாகும்.


இறை உணர்வில் தனித்திருத்தல் இறைவனுக்கு நன்றி செலுத்தி அவனது அருளைப் பெற விழிப்புடன் இருத்தல் இறைவனைப் பற்றியும் அவனது வல்லமை பற்றியும் அறிந்து கொள்ளல்... ஆகியவற்றில் பற்று கொண்டு தனித்திரு விழித்திரு பசித்திரு என்ற மூன்று நிலை பயிற்சிகளையும் செயல்படுத்திக் காட்டிட கடமையாக்கப்பட்டது தான் ரமலான் நோன்பாகும். மனிதனின் பாவங்களை எரித்து அழித்து நன்மைகளைப் பெறும் வகையில் ரமலான் நோன்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.


மனித வாழ்வியல் ஆனது சிறந்தோங்க இஸ்லாம் வலியுறுத்தும் ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமையாக நடுநாயகமாக நின்று முந்தைய இரண்டு கடமைகளான கலிமா என்ற ஏகத்துவ உறுதிமொழி மற்றும் தொழுகை ஆகியவற்றை ஓர்மையுடன் நிறைவேற்ற துணைபுரிவது தான் ரமலான் நோன்பு. அதேபோல் பிந்தைய கடமைகளான நான்காவது கடமையாக ஒருவர் தனது வருமானத்தில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு ஜகாத் கொடுப்பது ம் ஐந்தாவது கடமையாக வசதி படைத்தோர் தனது வாழ்நாளில் ஹஜ் செய்வதற்கு அடித்தளம் இடுவது தான் ரமலான் நோக்கமாகும்.


11 மாதங்கள் விரும்பியதை உண்டு மகிழ்ந்த மனித மனத்தை வருடத்தில் ஒரு மாதம் உடலாலும் மனதாலும் செயலாலும் பசித்திருக்க செய்து மனிதனை ஞான பக்குவ நிலைக்கு உயர்த்துவது தான் ரமலான் நோக்கமாகும்.


பகல் பொழுது முழுவதும் உணவோ தண்ணீரோ எதையும் உட்கொள்ளாமல் ஐம்புலன்களையும் அடக்கி மனதில் ஏற்படும் பாவ எண்ணங்கள் ஆன காமம் பேராசை போட்டி பொறாமை விரோதம் குரோதம் போன்றவைகளை அடக்கி அன்பு இறக்கம் தர்மம் ஒழுக்கம் பண்பாடு பணிவு வணக்கம் போன்ற நற்செயல்களை வளர்ப்பதுதான் ரமலானின் முக்கிய குறிக்கோளாகும்.


தினமும் 5 நேரம் தவறாமல் தொழுவது இரவில் எட்டரை மணி முதல் 10 மணி வரை பள்ளிவாசல்களில் ஆண்கள் திராவி  யாஹ என்ற தொழுகையை தொழுவதும் ரமலானின் தலையாய கடமையாகும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஐந்து நேரத் தொழுகையையும் திராவியா தொழுகையையும் தொழுது கொள்வார்கள். திராவியா தொழுகையில் குர்ஆனின் 30 சூராக்களின் 6666 வசனங்களை ஹாபீ ஷா என்ற ஹஸ்ரத் ஒவ்வொன்றாக 30 நாட்களி ன் திராவியா தொழுகையில் தொழுகையுடன் ஓத இஸ்லாம் மத ஆண்கள் அதனைக் கேட்டு பின் தொடர்ந்து தொழுவார்கள்.

ரமளான் நோன்பின் முப்பதாம் நாள் முடிவில் இஸ்லாம் மக்கள் ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்

.கா . ராசா மீரா   .

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,