வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் "-

 வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் "-

May be an image of one or more people and text
💥
ஏப்ரல் 12
International Day for Street Children -April 12
ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமெங்கிலும் உள்ள வீதியோர சிறுவர் களுக்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும்.இதனை இந்தியா, மொராக்கோ, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் வீதியோர சிறுவர்களும், யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளின் பள்ளிச்சிறுவர்களும் கொண்டாடிவருகின்றனர்.
சர்வதேச உள்ள வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை - சுமார் 10 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 7 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் இந்த எண்ணிக்கை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு இல்லாததால், இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.
பிறந்தக் குடும்பத்தின் மோசமான சூழல், நகரத்துக்கு இடம்பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் முறை முதலான காரணங்களால் பாதுகாப்பற்றச் சூழலில் வீதியோரச் சிறுவர்கள் வாழ்ந்திட வேண்டிய நிலை நீடிக்கிறது.வீதியோரச் சிறுவர்களுக்கு அடிப்படை உரிமை, பாதுகாப்பு, கல்வி முதலானவற்றை உறுதி செய்வதற்காக, சி.எஸ்.சி என்ற வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச அமைப்பால் கடந்த 2011-ல் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் இந்தத் தினத்தை அங்கீகரித்து விழிப்பு உணர்வுக்கு வித்திட்டு வருகின்றன. எனினும், இந்தத் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்காக, தொடர்ந்து உலக அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் குழந்தைகளின் நலனுக்காக இயங்கிவரும் ஹெல்ப் லைன் 1098, வீதியோரச் சிறுவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இத்தகையச் சிறுவர்களைக் கண்டால், 1098-க்கு அழைத்துத் தகவல் சொல்ல மறந்துடாதீங்க!
P others

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,