நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்

 நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பிறந்த நாள் இன்று ஏப்ரல், 2. தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.


இவரின் தந்தை பெயர் காத்தாசாமி பிள்ளை. தாய் குஞ்சம்மாள். நாமகிரிப்பேட்டை அரசினர் பள்ளியில் பயின்றவர்.
நாதசுவரம் வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி ரசிகர்களை கவர்ந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் பாட்டனார் சின்னப்ப முதலியாரிடம் நாதசுவரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின் அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி நாதசுவரம் பயின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாதசுவரக் கச்சேரிகளை ஏராளமாக நிகழ்த்தியுள்ளார்.
விருதுகள் தொகு
கலைமாமணி விருது, 1972
பத்மசிறீ விருது, 1981
சங்கீத நாடக அகாதமி விருது, 1981
இசைப்பேரறிஞர் விருது, வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.
ஏனைய சிறப்புகள் தொகு
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ 1977 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,