தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பி.ஏ.பெரிய நாயகி பிறந்த நாள் இன்று ஏப்ரல் 14
தமிழ் சினிமா மறந்து போன அற்புத கலைஞர்களில் பி.ஏ.பெரிய நாயகியும் ஒருவர். இவர் தான் முதன் முதலாக பின்னணி பாடிய பாடகி. அவரை பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்...
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பிரமாண்ட புராண படம் ஸ்ரீவள்ளி. இந்தப் படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் முருகன் வேடத்திலும், ருக்மணிதேவி வள்ளி வேடத்திலும் நடித்தனர். அந்த காலத்தில் படத்தில் பாடல் காட்சிகள் இடம்பெற்றால் அந்த பாடலை நடிப்பவர்களே பாட வேண்டும். டி.ஆர்.மகாலிங்கமும், ருக்மணிதேவியும் படத்தில் பாடித்தான் நடித்தார்கள்.
இந்தப் படத்தின் பணிகள் முடிந்ததும் படத்தை போட்டு பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு படத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றியது. அந்த குறை என்ன வென்றால் டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர் குரலுக்கு ஈடுகொடுப்பதாக ருண்மணிதேவியின் குரல் இல்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்த செட்டியார் மும்பையில் இருந்து நவீன ஒலிப்பதிவு கருவிகளை வரவழைத்தார். அப்போது மேடை கச்சேரிகளில் பிரபலமாக இருந்த பி.ஏ.பெரியநாயகியை அழைத்து ருண்மணி தேவி பாடலை திரும்ப பாடவைத்தார்.
படத்தை ஓடவிட்டு ருக்மணிதேவியின் வாயசைவுக்கு ஏற்ப அத்தனை பாடல்களையும் பாடிக் கொடுத்தார் பி.ஏ.பெரிய நாயகி. பாடலும், படமும் பெரிய வெற்றி பெற்றது. பி.ஏ.பெரியநாயகியின் பாடலுடன் என்றே படத்தை விளம்பரம் செய்தார், மெய்யப்ப செட்டியார்.
பி.ஏ.பெரிய நாயகி ஒரு நடிகையும் கூட. 1946ம் ஆண்டு வெளிவந்த ருக்மாங்கதன் என்ற படத்தில் நாரதாராக நடித்தார். 1947ம் ஆண்டு வெளிவந்த விசித்ரவனிதா என்ற படத்தில் ஆண்களை போன்று பேண்ட், டீசர்ட் அணிந்து நடித்தார். தளயதளய புடவைகட்டி நடித்த காலத்தில் இந்த புரட்சியை செய்தவரும் பி.ஏ.பெரியநாயகி
நன்றி: தினமலர்
Comments