வித்தியாச சுவையில் வறுத்த தேங்காய் தக்காளி சட்னி!

 

வித்தியாச சுவையில் வறுத்த தேங்காய் தக்காளி சட்னி!



அதே தேங்காய், தக்காளிதான். ஆனால், இதுபோன்று வறுத்து சட்னி செய்து பாருங்கள். நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள். இது செய்வதற்கான நேரமும் மிகவும் குறைவு.

வறுக்க தேவையான பொருள்கள் :

துருவிய தேங்காய் – 1 கப்
நறுக்கிய சிறிய வெங்காயம் – ¼ கப்
முழு உலர்ந்த சிவப்பு மிளகாய்- 3
கறிவேப்பிலை- 8 இலைகள்
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

தேங்காய் எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலை பருப்பு- ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை- 10 இலைகள்

செய்முறை :

நடுத்தர வெப்பத்தில் ஓர் வாணலியை சூடாக்கி, அதில் துருவிய தேங்காய், சிறிய வெங்காயம், உலர்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் சேர்த்து வறுக்கவும். தேங்காய் வெளிர் தங்க நிறமாக மாறும் வரை வறுக்கவும்.

இதனோடு நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும். தக்காளி மசிந்து வரும் வரை 3 நிமிடங்கள் வதக்கவும் ஆனால், முழுமையாக சமைக்க வேண்டியதில்லை.

இந்தக் கலவை குளிர்ந்தவுடன், 1¼ கப் தண்ணீருடன் ஒரு பிளெண்டரில் வறுத்த பொருட்களை சேர்த்து கரடுமுரடான பேஸ்ட்டாக அரைக்கவும்.

நடுத்தர வெப்பத்தில் ஓர் கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெய் சூடானது தாளிக்கும் பொருள்களை சேர்த்து, பருப்பு நிறம் பழுப்பாக மாறும் வரை வறுக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் சேர்க்கவும்.

உப்பு சரிபார்த்து இந்தக் கலவையை சுமார் 3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

சூடான இட்லி, தோசையுடன் அரைத்த சட்னியை பரிமாறவும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,