வெயில் ஒரு வரம்

 வெயில்என்பதுஇறைவனின்_பெரும்  #அருட்கொடையாகும்❗❗❓❓☀#உண்மையில்வெயில்காலம் #என்பதுஒருவரப்பிரசாதம்❗❗


⏩ வெயிலை வெறுக்காதீர்கள்❗❗


⏩ வெயில் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்❓


⏩ வரும் நோய்களை எப்படி சமாளிக்கலாம்❓


⏩ நாம் என்ன செய்யவேண்டும்❓

 ❌ செய்யக்கூடாது❓


🇨🇭 எப்படி சமாளிக்க வேண்டும்❓


☀ வந்தேவிட்டது வெயில். இன்னும் 3-4 மாதங்களேனும் இந்த வெயிலின் தாக்கம் இருக்கும்.


வெயிலில் இருந்து நமது உடம்பே தயாரிக்கும் மிக முக்கிய சத்து விட்டமின் டி. இதை நமது உடம்பே #விட்டமின்_D_3 ஆகவும் செய்து கொள்ளும். இந்த சத்து #சுண்ணாம்பு சத்தை உடம்பில் கிரகிக்க, தக்க வைக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் எலும்பு வளர்ச்சி, எலும்பு தேய்மானம் போன்றவற்றில் இதன் அவசியத்தை உணரலாம்.


காலை அல்லது மாலை இளம் வெயிலில் தினம் 10 நிமிட வெயில் பட்டாலே நமக்கெல்லாம் போதுமானது. 

விட்டமின் டி எலும்பு மட்டுமல்லாமல்…… 


▶ஆஸ்துமா, 


▶சர்க்கரை நோய், 


▶புற்றுநோய் 


என்று பல பிணிகளை வளர விடாமல் காக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.


குழந்தைகளில்#நோய்எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தி #மூளை_நரம்பியல் மணடலத்திற்கும் வலுசேர்க்கிறதாம்.


இவ்வளவு பயன்கள் இருந்தும் , வெப்ப மண்டல இந்தியாவில் கூட இந்த சத்து குறைபாடு அதிகரித்து வருகிறதாம். முக்கியமாக பெருநகரங்களில். 

ஏன்❓


வேறென்னவாக இருக்க முடியும்❓


வெயிலை தவிர்ப்பது தான்❗


காலை மாலை இளம் வெயிலை கூட எவரும் விரும்புவதில்லை. படுக்கையறை முதல் வாகனம், பள்ளி, அலுவலகம், நுகர்விடம் என்று எங்கும் எதிலும் வெயில் தெரியாமல் இருக்க ஏஸி வந்து விட்டதே!


குழந்தைகள் வெயிலில் விளையாடுவதில்லை. அப்படியே வெளியே போகவேண்டுமா போடு சன்சிகீரீன் லோசன். அல்லது கூல் கூல் பவுடர். ஆண் பெண் குழந்தை பெரியவர்கள் என்ற பாகுபாடு இன்றி இதை இப்போது உபயோகிக்கிறார்கள். கொடுமை.  அப்புறம் எங்கிருந்து கிடைக்கும் விட்டமின் D❓


வெயில் மிக குறைவாக கிடைக்கும் இடங்களில் வாழ்பவர்கள், ஆஸ்துமா, சிலவகை புற்றுநோய், தோல் பிரச்சினை என பல நோய்களுக்கு தீர்வாக வெயில் குளியல் விரும்புகிறார்கள். அங்கு வெளிரிய தோல் கொஞ்சம் கருத்தால் அழகாகவே பார்க்கப்படுகிறது.


உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விட்டமின் D சத்து குறைபாடு அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணம் நமது நுகர்வு மாற்றம் தான்.பெருநகரங்களில் வாழும் வயதானவர்கள் முக்கியமாக வெயில் மறைவிலேயே வாழும் அவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கண்ணாடி மறைவில் வெயில் படுவது அவ்வளவு நல்லதல்ல. உம். கண்ணாடி ஜன்னல், வாகன ஜன்னல்கள், இவற்றின் மூலம் வடிகட்டப்பட்ட வெயில் ஆபத்து. புற்றுநோய் இங்குதான் வெயிலினால் அதிகமாகலாம். இப்படிப்படட் வடிகட்டிய வெயிலை தவிர்த்தலே நல்லது.


தோலின் நிறம் கருப்பதையும் ஒரு காரணமாக பலர் வெயிலை தவிர்க்கின்றனர். இது மிகப்பெரிய சமூக மற்றும் மன ரீதியான பிற்போக்கு சிந்தனை. இந்த சிந்தனையை ஆதி அடிமை புத்தியிலிருந்து இன்று வெள்ளை தோலுக்கான லோசன் விற்கவும் சன்சிகீரீன் லோசன் விற்கவும் வணிக உலகம் மிகச்சரியாக வளர்த்து வருகிறது. கவனம்.


இப்படி எளிமையான சூரிய ஒளியில் கிடைக்க வேண்டிய சத்தை தவிர்த்து விட்டு , இதையும் விலை கொடுத்து வாங்க மக்களை வணிக உலகம் மெல்ல மூளைச்சலவை செய்ய

ஆரம்பித்துள்ளது. விளையாட ஆற்றல் வேண்டுமானால் விட்டமின் டி நிறைந்த எண்ணெயில் பொரித்த முறுக்கு சாப்பிடனுமாம்.மூட்டு பிரச்சினை, சோர்வின்மைக்கு இந்த எண்ணையில் பொரித்த வடை சாப்பிட வேண்டுமாம். 

அடேய்! ஏமாற்றுவதற்கும் ஒரு அளவில்லையா❓ மக்கள் கோமாளிகள் ஆனால் வணிகனுக்கு கொண்டாட்டம் போல.


இவ்வளவு சொல்லியும் மிக எளிதாக கிடைக்கும் இந்த சத்தை எண்ணைக்கும், மருந்துக்கும், மசாஜ் சென்டருக்கும் செலவழித்து தான் பெறுவேன் என்பவர்கள் அப்படிக்கா சென்று விடவும்.


இனி வெயில் காலத்தில் குழந்தைகளை சம்மர் கேம்ப்புக்கு அனுப்பாமல் வெளியில் வெயிலில் விளையாட அனுப்புங்கள். காலை மாலை மட்டுமாவது. 


வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து காலை இளம் வெயிலில் இருந்து குளிப்பார்கள் முன்னர். குறைந்தது வாரம் ஒருமுறையேனும் என்று இந்த பழக்கத்தை மீட்டெடுப்போமா❓


பெரியவர்கள், முக்கியமாக படுக்கையில் விழுந்துவிட்டவர்களை தினமும் இளம் வெயிலில் 10 நிமிடமாவது உட்கார வையுங்கள். 

பெருநகரங்களில் பால்கனியில் கூட இதை செய்யலாம்.முக்கியமாக முதியோர் இல்லங்கள் இதை பின்பற்ற வேண்டும். 


வெளியே போகும்போது உச்சிவெயில், உக்கிரவெயில் இல்லாத போது முழுக்க மூடிய ஆடை, குடை பயன்படுத்தாமல் கொஞ்ச நேரம் வெயில் படும்படி தான் நடப்போம்.


▶வெயிலின் உஷ்ணசக்தியை கொண்டே உலகம் இயங்குகின்றது.


▶பனிக்காலம்,மழைக்காலம்,

குளிர்காலம்  இவைகளைவிட வெயில்காலமே மிகவும்  சிறந்ததாகும் ,


▶வெயில் நம் மீது படும்போது அதன்  சக்தியை  கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது.


▶மூட்டுவலி  உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும் , தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்த படுகின்றது ,


▶பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது.


▶நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில்காலத்திலேயே  அதிகளவு உடலை சுற்றிவருகின்றது ,


▶வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன.. மழைகாலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது...


▶நீர் எந்தளவுக்கு  விவசாயத்துக்கு  முக்கியமோ அதே  அளவு வெயிலின் உஷ்ண சக்தியும் மிகவும்  அவசியமானதாகும்.


▶வியர்வை எனும்  அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம்  நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகின்றது,


▶இந்த வியர்வையின் மூலமாக  சிறுநீரகங்களின் வேலை பளு குறைகிறது.  சிறுநீரகங்கள் பலம் பெறுவதும் வெயிலினால்தான் நடைபெறுகின்றது. இதை அனுபவிக்காமல் ஏசி  ரூம்களில்  முடங்கி  கிடக்கலாமா❓


⭕ தினமும் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றால் கிடைக்கும் 15 நன்மைகள்.❓❓❗❗


▶1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.


▶2. நல்ல உறக்கம் பெற


▶3. மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்


▶4. அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது


▶5. தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்


▶6. குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது


▶7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்*


▶8. புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்


▶9. டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக் குறைக்கும்


▶10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது


▶11. உடல் பருமனைக் குறைக்க உதவும்


▶12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்


▶13. கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது


▶14. மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்


▶15. பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்.                                                          


🇨🇭எப்படி சமாளிக்க வேண்டும்❓


☀ பதநீர், இளநீர், மோர், நன்னாரி பானங்கள் ஆகியவையே நமக்கான கோடைக் கேடயங்கள். உடல் சோர்வு உடனடியாகத் தீர பானகமோ, கருப்புச் சாறோ போதும். நீர்த்துவம் உடலில் குறைந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, லேசான அமிலத் தன்மையுடன் உடலைக் குளிர்விக்கும் புளியைக் கரைத்து பனைவெல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து. 


☀ கோடைக்கு புரோபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் மோரும், சிறுநீரகப் பாதைத் தொற்று நீக்கும் வெங்காயமும், இரும்பு, கால்சியம் நிறைந்து உடலை உறுதியாக்கும் கம்பங்கூழும் போதும்... எத்தனை உக்கிரமான அக்னி நட்சத்திரத்தையும் சமாளித்துவிடலாம். இந்தப் பொருட்கள், வெப்பத்தால் வரும் அம்மை நோயையும் தடுக்கும். 


☀ கோடை காலத்தில் அம்மை, வாந்தி, பேதி, காமாலை, சிறுநீரகக் கல், கண்கட்டி, வேனல் கட்டிகள், வேர்க்குரு... போன்ற வெப்பத்துக்கான பிரதிநிதிகள் விருந்தாளிகளாக வந்து போகலாம். இருந்தாலும், குளியல் முதல் தூக்கம் வரை நாம் கடைப்பிடிக்கும் சிற்சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் சமாளிக்க முடியும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியல், மீதி நாள் தலைக்குக் குளியல். எள்ளுத் துவையலுடன், தொலி உளுந்து (முழு உளுந்து) சாதம், கம்பங்கூழ் - சிறிய வெங்காயத்துடன் வாழைத்தண்டு, மோர் பச்சடி, வெள்ளைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங் களி, வெந்தயக் களி, முழு உளுந்து போட்டு ஆட்டிய மாவில் தோசை... எனச் சாப்பிடுங்கள். 


☀ தர்பூசணிச் சாற்றுடன் மாதுளைச் சாறு கலந்து அருந்தி தாகம் தணிக்கலாம். மோருக்கும் இளநீருக்கும் இணையான கனிமமும் வைட்டமினும் கலந்த பானங்கள் செயற்கையில் கிடைக்காது; அதாவது, குளிர்பானம் அந்த அருமை இல்லாதது. 


☀ உறங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுங்கள். அக்குள் போன்ற உடலின் மடிப்புப் பிரதேசங்களில் படர்ந்திருக்கும் வியர்வைப் படிமத்தை அழுக்குப் போக தேய்த்துக் குளியுங்கள். 


☀ கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம். தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.


☀ தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.


☀ இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.


☀ உடல் சூட்டின் அளவை குறைக்க உதவும் வைட்டமின் சி எலுமிச்சம் பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.


☀ வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


☀ வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச்செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.


☀ பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.


☀ கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம். கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.


⭕ #மூலிகைகுடிநீர்செய்வது_எப்படி❓


நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். 


வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது.


#தேவையானமூலிகைபொருட்கள்❓


1. ஜாதிகாய்


2. ஏலக்காய்


3. லவங்கம் (கிராம்பு)


4. வெட்டிவேர்


👉 சுத்தமான வெள்ளை துணி.


 👉சுத்தமான குடி நீர் 1 லிட்டர்


                          

ஒரு ஜாதிகாயில் எட்டில் ஒரு பங்கு மட்டும் அதாவது 0.5 கிராம் (ஜாதிகாயை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்), 


👉நசுக்கிய ஏலக்காய் எண்ணிக்கை - 2 , 


👉லவங்கம் (கிராம்பு) 2 மட்டும், 


👉வெட்டி வேர் 1 கிராம் 


இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வெள்ளை துணியில் வைத்து சிறிய மூட்டையாக கட்டி  கொள்ளவும். 


பிறகு, ஒரு லிட்டர் குடி நீரை பாத்திரத்தில் எடுத்து (புதிய மண் பத்திரமாக இருந்தால் மிகவும் நன்று) அதில் கட்டி வைத்துள்ள மூலிகை மூட்டையை போட்டு இரவு முழுவதும் ஊற விட்டு விடவும்.


                         

மறுநாள் காலை மூலிகை மூட்டையை அதே நீரில் நன்கு அலசி எடுத்து விடவும். தயார் செய்த மூலிகை நீரை ஐந்து லிட்டர் தண்ணிரில் கலந்து கொள்ளவும் (தங்களின் சுவைக்கு ஏற்றது போல் நீரின் அளவை மற்றிக் கொள்ளவும்). இன்நீரை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள நீரை மட்டும் பயன்படுத்தவும். 


பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்கப்ப்டும் குடி நீர் நீண்ட நாட்கள் கெட்டுபோகாமல் இருக்க வேதிப் பொருட்கள் கலக்கபட்டிருக்கலாம் இது மூலிகை தன்மையை கெடுத்து விடும். ஐந்து லிட்டர் மூலிகை குடி நீர் தயார் செய்ய 5 ரூபாய் கூட தேவைப்படாது.


⭕ #மூலிகைகுடி_நீரினால்

#என்ன_பயன்❓

                     

👉இம் மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால்…… 


🌟உடல்வலி , 


🌟வாயுதொல்லை, 


🌟அஜீரணம், 


🌟வாந்தி, 


🌟மயக்கம், 


🌟தசை வலி, 


🌟வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், 


🌟சிறு நீரக பிரச்சனைகள், 


🌟வாய் துருநாற்றம் 


ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சியடையவும் செய்கிறது.


🇨🇭ஆப்பிள் ஜூஸ் 


ஆப்பிள் ஜூஸில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைய உள்ளது. ஆகவே மூட்டு வலிகள், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாகும். 


🇨🇭ஆப்ரிக்காட் ஜூஸ் 


ஆப்ரிக்காட்டில் வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் கே போன்றவை உள்ளது. இதனால் இந்த பழ ஜூஸை குடித்தால், முதுமைத் தோற்றம் நீங்கி, எலும்புகள் வலுவுடன் இருப்பதோடு, சருமம் மற்றும் கூந்தல் பொலிவோடு இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், அனீமியா மற்றும் மாதவிடாய் பிரச்சனை போன்றவையும் சரியாகும். 


🇨🇭ப்ளாக்பெர்ரி ஜூஸ் (Blackberry Juice) 


இதில் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், உடலில் நோயை உண்டாக்கும் செல்களை அழித்து, புற்றுநோய் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் இது நீரிழிவு நோயாகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஜூஸ். அதுமட்டுமின்றி இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. 


🇨🇭திராட்சை ஜூஸ் 


திராட்சை ஜூஸில் வைட்டமின்களை தவிர, கால்சியம், காப்பர், அயோடின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆகவே இதனை குடிக்கும் போது, மலச்சிக்கல், இதய நோய், உடல் வறட்சி, ஆர்த்ரிட்டிஸ், வாத நோய், கல்லீரல் பிரச்சனை மற்றும் பல அழற்சிகள் குணமாகிவிடும். 


🇨🇭கிவி ஜூஸ் 


கிவியில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் சரியாகிவிடும். இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும். 


🇨🇭எலுமிச்சை ஜூஸ் 


எப்போதும் எலுமிச்சை ஜூஸை தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய எலுமிச்சை ஜூஸை குடித்தால், அதில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது செரிமானத்தையும் அதிகரிக்கும். 


🇨🇭ஆரஞ்சு ஜூஸ் 


ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். மேலும் இந்த பானத்தில் வைட்டமின் பி, சி, கனிமச்சத்துக்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி சீராக செயல்பட வைக்கிறது. 


🇨🇭பீச் ஜூஸ் 


பீச் பழத்தால் செய்யப்பட்ட ஜூஸை பருகினால், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மனதில் ஏற்படும் கவலை மற்றும் அழுத்தம் போன்றவை குணமாகும். 


🇨🇭பேரிக்காய் ஜூஸ் 


இந்த பழச் சாற்றில் போதுமான அளவில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உள்ளன. அதிலும் இந்த ஜூஸ் ஆர்த்ரிட்டிஸ், வாத நோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும். மேலும், இது உணர் இரத்த அழுத்தத், பெருடகுடல் பிரச்சனை, புரோஸ்டேட் பிரச்சனை மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை குணமாக்கும் சிறப்பான பானமாக உள்ளது. 


🇨🇭அன்னாசி ஜூஸ் 


அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, இரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்க சிறந்தாக உள்ளது. 


🇨🇭பப்பாளி ஜூஸ் 


பப்பாளியில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே பப்பாளியை ஜூஸ் போட்டு குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக கொலஸ்ட்ராலின் அளவு குறையும். 


☀ வெயிலை அனுபவியுங்கள் அத்துடன்…❗


உங்களது  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள்❗


☀ இப்படி வெயிலுடனான நமது உறவை மீட்டெடுப்போம்.❗


☀ வெயில் ஒரு வரம்.❗

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,