வெண்பூசணியின் மருத்துவ பயன்கள்

 வெண்பூசணியின் மருத்துவ பயன்கள்



🍈🍈🍈🍈🍈



🍉 வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள காய் ஆகும். இதற்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உண்டு. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு. மேலும் வெண்பூசணியின் பூ, காய், இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளன.


🍉 வெண்பூசணியை பயன்படுத்தினால் இதயத்தை பலப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், கல்லீரல் பலவீனமாவதை தடுத்து பலமாக்கும். வெண்பூசணியில், ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது.


🍉 வெண்பூசணியை அல்சர் உள்ளவர்கள் தினமும் எடுத்துக்கொண்டால் அல்சர் சரியாகும். இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை வெண்பூசணிக்கு உள்ளது. இரத்த மூலத்துக்கும் மருந்தாக உள்ளது.


🍉 வெண்பூசணியின் விதைகளை பயன்படுத்தி சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். வெண்பூசணி விதைகள் 10 வரை எடுத்து லேசாக நசுக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.


🍉 வெண்பூசணியின் இலைகளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் தொற்றுகளுக்கு மேல்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தலாம். வெண்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வெண்பூசணி கொழுப்பு சத்தை கரைத்து உடல் எடையை குறைக்கும்.


🍉 காய்கறிகளில் வெண்பூசணி தான் பெரிய காய்கறியாகும். ஆனால் இதை சாப்பிட்டால் நாம் எவ்வளவு பெரிய உடம்பை வைத்திருந்தாலும் உடல் இளைத்துவிடும். இந்த வெண்பூசணி சாற்றில் அவ்வளவு நற்குணம் உள்ளது.


🍉 வெண்பூசணியை கீற்றாக அரிந்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்து சிறிது உப்பு அல்லது தேன் கலந்து தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நம் உடலுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.


🍉 இந்த வெண்பு+சணி சாற்றை தினமும் பருகி வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும். உடலில் உள்ள வெப்பத்தை போக்கும். சிறுநீர்ப்பிரச்சினைகளை அகற்றிவிடும். கற்களைக் கரைக்கவும் உதவும். தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,