ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டிய கோளாறு

 ஆட்டிசம் அறிந்து கொள்ள வேண்டியது

🎯ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிசத்தின் மாதமாகக் கொண்டாடுகிறார்கள்.💥ஏப்ரல் இரண்டாம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.💥
ஆட்டிசக் குறைபாடு உள்ள குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து உரையாடுவதும்,அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுமென .. மேலை நாடுகளிலும், வட இந்தியாவிலும் இந்த நாள் சிறப்புக் கவனத்தைப் பெறுகிறது. ஆனால் நம் ஊரில் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்பதும் பெரும் குறையாகவே உள்ளது.
அதிலும் நம் அரசு கூட ஆட்டிசம் என்பதைத் தனித்துறையாகக் கொள்ளாமல், மூளை வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களோடு தான் இவர்களை இணைக்கிறது.
ஆட்டிசம் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாது. இதன் அறிகுறிகளின் தீவிரம் பல்வேறுபட்ட அளவுகளில் இருக்கும்.
மிக்க மெலிதான கற்கும் திறன் குறைபாட்டில் தொடங்கி, மிகத் தீவிரமான பாதிப்பு வரை அதன் அளவு பரந்துபட்டது.
ஆட்டிசம் என்ற சொல்லுக்கு தமிழில் “தன் முனைப்புக் குறைபாடு” என்று கூறலாம்.இது ஒரு நோய் அல்ல. இது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. நமது மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றி உள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாமல் செய்யும் ஒரு குறைபாடே ஆட்டிசம் ஆகும்.
எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக் கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்று ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம்.ஆனால் இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.
குழந்தை பிறந்த பின் காது கேளாமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக் குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றை எளிமையாகக் கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசத்தை அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாது.
இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளி விவரங்கள் இங்கே இல்லை.பெற்றோர் தொடங்கி மருத்துவர் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.மேலை நாடுகளோடு ஒப்பிடும் போது,
தென்னிந்தியாவின் நிலை மிக மோசமாக உள்ளது.தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தின் நிலை மிகக் கவலைக்கிடமாகவே உள்ளது
💙! By✍🏼 யெஸ். பாலபாரதிComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,