ஓசியானா கவிதை by மஞ்சுளா

 ஓசியானா

------------------



கவிதை பக்கம்














ஓடும் நீரின் ஓசைகளை
எழுப்பியபடி நகர்ந்து கொண்டிருக்கும் நதியின் கரையில் அமர்ந்து தேடுகிறேன்
மிதக்கும் சிறுபூக்களெனக்
கூழாங் கற்கள் அடியில்
பிஞ்சுப் பாதங்களைக்
கெஞ்சுகின்றன
உறங்கும் என் மகளின் நெற்றியில் முத்தமிட்டு அழைக்கிறேன்
ஒரு பாடலோடு
நெளிந்தோடும் நதியில்
அவளை நனைத்து மீண்டும் எழுப்புகிறேன்
இன்பத்தில் துடிக்கும் என் இதயம் வருடிய நதியில் அவள் கைகள் கொட்டி முழக்கும் ஓசை....
எதிர்பாராத ஒரு தருணம் தான்
அது...
கூழாங்கற்களில் ஒன்று
தெறித்து விழுகிறது
நதியின் பெயர் சொல்லி
மீண்டும் மீண்டும்
அழைக்கிறேன்
பச்சைப் பாம்புகளை
என் மீது அசைய விட்டு
மஞ்சள் சிறகென
வானில் பறந்தலைகிறாள் அவள்
ஓடும் நீரில்
நடுங்கும் பிரியங்களோடு
அவளின் பெயரை
எழுதுகிறேன்
பிம்பங்களின் ஒளிச்சுவடென
என் விழிகளில் வழிகிறாள்
ஓசியானா
- மஞ்சுளா

(*ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்* என்ற என் கவிதை தொகுப்பிலிருந்து )

Comments

அருமை அருமை.. அன்பும் பாசமும் கலந்த அழகு தமிழ்க்கவிதை!!
பாராட்டுக்கள் சகோதரி💐💐
அருமை அருமை.. அன்பும் பாசமும் கலந்த அழகு தமிழ்க்கவிதை!!
பாராட்டுக்கள் சகோதரி💐💐

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,