Extradition

 ஒருவன் ஒரு நாட்டில் குற்றம் புரிந்து விட்டு அயல் நாட்டிற்கு தப்பி சென்று விட்டால், அந்த அயல் நாடு அவனைப் பிடித்து, அவன் குற்றம் புரிந்த நாட்டிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமானால் சில நிபந்தனைகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.



1) சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கிடையே உடன்படிக்கை (Treaties) இருக்க வேண்டும்.


2) ஒவ்வொரு நாடும் திரும்ப ஒப்படைத்தல் தொடர்பாக உள்நாட்டு சட்டத்தை உருவாக்கியுள்ளன. அதுப்படியே குற்றவாளியை திருப்பி தருவதா, வேண்டாமா என்றும் முடிவு செய்கின்றன. 

(Indian Extradition Act of 1962)


3) குற்றம் செய்த நபர், தப்பிச் சென்ற நாட்டின் குடிமகனாக இருந்தால், அவனை அந்நாடு ஒப்படைக்க வேண்டுமென்பதில்லை.


4) திரும்ப ஒப்படைப்பதற்கு ஏற்றது என சில குற்றங்கள் மட்டுமே உள்ளது. மேலும் எந்தெந்த குற்றங்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்பதை, நாடுகள் தாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறிவிடுவது உண்டு.


5) அரசியல் குற்றங்கள், ராணுவக் குற்றங்கள், மதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிறிய குற்றங்களுக்கு, குற்றவாளி திருப்பி ஒப்படைக்கப் படுவதில்லை.


6) குற்றமானது, குற்றம் செய்த நாட்டிலும், தப்பிச் சென்ற நாட்டிலும், ஒரே குற்றமாக கருதப்பட வேண்டும்.


7) குற்றவாளியைத் திருப்பித் தர கோரிக்கை விடுக்கும் முன், அவன், தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் புரிந்ததற்கான சான்றுகளை ஆதாரமாக காண்பிக்க வேண்டும்.


தகவல்களை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,