The Priest (மலையாளம்)
- Get link
- X
- Other Apps
The Priest
(மலையாளம்)
வித்யாசமான படங்கள் மலையாளத்தில் பார்க்கமுடியும்
என்பதால் பார்க்க 2 மணி 27 நிமிடங்கள்போனதே தெரியல
ஒரு கோடீஸ்வர பெண்மணி தற்கொலை செய்துகொண்டு மரணத்தை தழுவ
அந்த மரணத்தை விசாரிக்க அந்தப்பகுதி போலீஸ் அதிகாரியுடன் பாதரான மம்முட்டி களமிறங்குகிறார். அந்த பெண்மணியின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே குறிப்பிட்ட கால இடைவெளியில் தற்கொலைசெய்து கொண்டு மரணித்தது தெரிய வரவும் சில தடயங்கள் மூலம் அவை அனைத்துமே கொலை என கண்டுபிடிக்கிறார் மம்முட்டி.
அந்த பெண்மணி கொலை செய்யப்பட்ட சமயத்தில், உடன் தங்கியிருந்த பேபி மோனிகா மட்டும் எப்படி கொலைகாரர்களிடம் இருந்து தப்பினார் என்கிற ஆச்சர்யம் கலந்த சந்தேகம் மம்முட்டிக்கு வர அதுகுறித்து விசாரிக்க மோனிகாவின் பள்ளிக்கு செல்லவும் மோனிகாவின் விசித்திர போக்கும் பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியையான நிகிலா விமலிடம் மட்டும் நன்றாக ஒட்டிக்கொண்டு பழகுவுதும் மம்முட்டிக்கு வர பின் தொடரும் திகில் சம்பவங்கள்தான் மீதிக்கதை,
மோனிகாவின் விசித்திரமான நடவடிக்கைகளுக்கு காரணம் வர் கண்டுபிடிக்கும் தகவல்கள் படம் பார்க்கும் நமக்கும் சேர்த்து, பற்பல ஆச்சர்யங்களையும் அதிர்ச்சியையும் தருகிறது
த்ரில்லர், மிஸ்ட்ரி த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் என விதவிதமான கதைகளுடன் ல் வெளிவரும் படங்களின் மத்தியில் இந்தப்படம் இவை அனைத்தும் கலந்த கலவையாக, அதேசமயம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராகவும் இருப்பதை பாராட்டலாம்
படம் முழுதும் ஒரே கருப்பு உடையில் அடர்ந்த தாடியுடன் பாதர் கார்மென் பெனடிக்ட் ஆக வரும் மம்முட்டி அந்த கதாபாத்திரத்திற்கு ஏக பொருத்தம்..
. பேபி மோனிகா பற்றிய முடிச்சுக்களை அவர் அவிழ்க்கும் விதம், மீண்டும் ஒரு மௌனம் சம்மதம் படம் பார்த்தது போல இருக்கிறது..
முதன்மை நாயகி என மஞ்சு வாரியர் இருந்தாலும் படம் முழுதும் வரும் நிகிலா விமலுக்குத்தான் கூடுதல் வேலை
இந்த மூவருக்கும் ஈடுகொடுத்து மொத்தப்படத்தையும் தனது அபாரமான நடிப்பால் நகர்த்தி செல்வது பேபி மோனிகாதான்.பல காட்சிகளில் நமக்கே அவரை பார்க்கும்போது பயம் ஏற்படுகிறது
ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ். இருளிலேயே நடைபெறும் நிகழ்வுகளை, த்ரில்லிங் மூடு மாறாமல் தனது காமராவில் , சில காட்சிகளில் ஜில்லிட்டு நடுங்கினால் அதில் ராகுல் ராஜின் பின்னணி இசை
படத்தின் துவக்கத்தின் தற்கொலைகளை பற்றி மம்முட்டி ஆராய்ந்து கண்டுபிடிக்க , இனி மீதிப்படத்தில் என்ன விஷயம் இருக்கப்போகிறது என்கிற லேசான எதிர்பார்ப்பு நமக்கு
அந்த சமயத்தில் , கதையின் ரூட்டையே மாற்றிய அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோவின் புத்திசாலித்தனம் தான் படத்தின்
குறிப்பாக க்ளைமாக்ஸ், நாம் யூகிக்க முடியாதபடி ட்விஸ்ட் மேல். ட்விஸ்ட்
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக அதிரடி என்ட்ரி கொடுத்துள்ளார் மம்முட்டி
பிகு
இது நிச்சயமாக விமர்சனம் அல்ல
எண்ண பரிமாற்றம்
- Get link
- X
- Other Apps
Comments