10 ஆண்டுகளுப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி

 அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
"திராவிட இயக்கத்தை, நம் அன்னைத் தமிழைக் கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்துள்ளது. வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம் விண் அதிர எங்கும் எதிரொலிக்கின்றது.
வெற்றியைத் தவிர வேறு இல்லை என்று, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.
வெற்றிகள் தொடரட்டும்; பணிகள் தொடங்கட்டும்; தொடர்ந்து நிகழட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும் என இந்தப் பொன்னான வேளையில், என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். மதிமுக உறுதுணையாக இருக்கும்.
ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்தார்
நன்றி: இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,