நரசிம்ம ஜெயந்தி 2021 :மே மாதம் 25 ஆம் தேதி

 நரசிம்ம ஜெயந்தி 2021 :மே மாதம் 25 ஆம் தேதி பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் ஓடி வருவார்


 பக்தன் அழைத்ததும் அவனின் துயர் துடைக்க ஓடோடி வந்தவர் நரசிம்மர். மகா விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானவராக பார்க்கபடும் நரசிம்மர். மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். 2021ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    


வைஷ்ணவர்களின் முதன்மை தெய்வமாக நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர். தன்னை துதிக்கும் பக்தரை காக்க எந்த நேரத்திலும், எந்த உருவிலும் வந்து காத்தருளுவார் நரசிம்மர்.


 நரசிம்மரின் தத்துவம் :


 தான் எந்த நிலையிலும் சாகக்கூடாது என இரணியன் கசிபு பல விஷயங்களை யோசித்து பிரம்ம தேவரிடம் வரம்பெற்றான்.

அதாவது இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என வரம் கேட்டான்.


 திருப்பதி வெங்கடாஜலபதிக்கே குல தெய்வம் யார் தெரியுமா?


 வரம் பெற்ற இரணியன், இனி நான் தான் உங்களின் கடவுள். அனைவரும் என்னை வணங்க வேண்டும் என கட்டளைப் பிறப்பித்தான்.


 ஆனால் இரணியனின் மகன் பிரகலாதனோ, பிறப்பிலேயே நாராயண மந்திரத்தை கேட்டு, அப்போது முதல் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தார். அதோடு, தன் தந்தையை வணங்க தயார், ஆனால் கடவுளாக நாராயணனை மட்டும் தான் ஏற்க முடியும் என கூறினான்.


 பிரதோஷம் நிகழ்வு கடைப்பிடிக்கப்படும் மதுரை யோக நரசிம்மர் கோயிலின் சிறப்புகள்


 தன்னை கடவுளாக ஏற்க வேண்டும் என இரணியகசிபு, பிரகலாதனை பல கொடுமைகள் செய்தான் முடியாததால், மகன் என்றும் பாராமல் கொல்ல பார்த்தான். ஆனால் அனைத்து முறையும், அவன் உச்சரித்து வந்த ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரம் பிரகலாதனைக் காப்பாற்றியது.


 வரத்தின் படி அவதரித்த நரசிம்மர்:

ஒவ்வொரு முறையும் நாராயணன் தான் தன்னை காப்பாற்றியதாகப் பிரகலாதன் கூறியதால் மிகவும் கோபமடைந்த இரணியன், “எங்கே இருக்கிறான் உன் நாராயணன்”என பிரகலாதனிடம் கேட்டான்.


யாராலும் அவிழ்க்க முடியாத பூரி ஜெகந்நாதர் கோவில் மர்மங்கள் பற்றி தெரியுமா?... ரொம்பவே குழப்பமாதான் இருக்கு...


 அதற்கு பிரகலாதன், ‘தந்தையே நாராயணன் பரம்பொருள் அவர் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காக்கக்கூடியவர் நாராயணன்’ என்றான்.


 அப்போது, ‘இந்த தூணில் இருக்கிறானா’ என கேட்க, அதில் என்ன சந்தேகம் என்றான் பிரகலாதன்.


 உடனே தன் கதாயுதத்தால் தூணை உடைக்க, தூணைப் பிளந்துகொண்டு மிகுந்த ஆக்ரோஷத்துடன் வெளிவந்தார் நரசிம்மர்.


 தடைப்பட்ட காரியத்தை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம்


 இரணியன் கேட்ட வரத்தின் படியே, பகல், இரவு பொழுது இல்லாத அந்திமாலை பொழுதில் வந்தார். சிங்க தலையும், மனித உடலும் கூடியதாகவும், எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் தன் நகத்தால் கொன்றார்.வீட்டின் வெளியே அல்லது உள்ளேயும் இல்லாமல் வாசல் படியில் அமர்ந்து பூமியில் இரணியனின் உடல் படாமல் வதம் செய்தார். அவனின் குருதியை ஒரு சொட்டு கூட கீழே விடாமல் உறிஞ்சி, அவனின் குடலை மாலையாக அணிந்து கொண்டார்.


 நரசிம்ம ஜெயந்தி 2021 எப்போது?

மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். 2021ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி  நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


 நரசிம்மர் ஜெயந்தி விரதம்:

நாளை காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 வரை பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது.


 நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது.


 பெருமாளுக்கு உகந்த மலர்கள், நைவேத்தியம், வஸ்திரத்தை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.


 நரசிம்மர் காயத்ரி மந்திரம்


 ஓம் வஜ்ர நாகாய வித்மஹே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்


 நரசிம்மர் மூல மந்திரம்


 உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்


 நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது நல்லது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,