பிரான்ஸ்.. கதற வைத்த 3வது அலை.. இன்று தொற்றை ஒழித்து.. மக்கள் ஹேப்பி

 

கதிகலங்கிய பிரான்ஸ்.. கதற வைத்த 3வது அலை.. இன்று தொற்றை ஒழித்து.. மக்கள் ஹேப்பி.. என்ன காரணம்?

பிரான்ஸ் நாட்டில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இருந்தாலும், கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் கடுமையான பாதிப்பே இருந்தது..

அந்த வகையில், பிரான்ஸ் நாடும் ஒன்று.. கடந்த ஒன்றரை வருடங்களில் இங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

பாரிஸ் அதேபோல, தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகிளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.

தடுப்பூசி அவ்வளவு ஏன், கடந்த மாதம்கூட, பிரான்ஸ் நாட்டில் தொற்று மிக அதிகமாகவே இருந்தது.. ஆனால், என்ன ஆச்சரியம், திடீரென தொற்று பாதிப்பு எண்ணிக்கை அங்கு குறைய ஆரம்பித்துவிட்டது.. அதற்கு முக்கிய காரணம், அந்த நாட்டு மக்களில் 30 சதவீதம் பேர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டார்களாம்.

கட்டுப்பாடுகள் இதையடுத்து, தற்போது பிரான்சில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மொத்தமாகவே தளர்த்தப்பட்டுள்ளது.. சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள் முதல்கொண்டு எல்லா கடைகளும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.. சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு விட்டன.. இதனால் அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. முன்பு போலவே, பழைய நிலைக்கு திரும்பி, சுதந்திரமாக ரோடுகளில் ஹாயாக நடக்க தொடங்கி விட்டனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,