வீட்டிலேயே ஹோட்டல் சுவை...

 

வீட்டிலேயே ஹோட்டல் சுவை... #HowToMakeAtHome
ங்கள் விருப்ப உணவுகளை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்கிறார் செஃப் வினோத்குமார்.

பலருக்கும் விருப்பமான பிரபல ஹோட்டல் ரெசிப்பிகளின் செய்முறைகளை இந்த இதழில் ஆங்காங்கே கொடுத்திருக்கிறார்.

வடகறி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - 2, கிராம்பு - 2, பிரியாணி இலை - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிய வடைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்துப் பொன்னிற மாக வதக்கவும்.

தக்காளியை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துச்சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் தயாராக உள்ள வடைகளை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,